Try GOLD - Free
தலைகுனிய வைக்கும் அரிவாள் கலாச்சாரம்!
Nakkheeran
|April 19-22, 2025
ஐந்து நாட்கள் விடுமுறை, சித்திரை ஆண்டுப் பிறப்பிற்குப் பின் ஏப்-16 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
நெல்லையின் பாளை வ.உ.சி. மைதானம் பக்கமுள்ள அந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் பாளை, மேலப்பாளையம் கே.டி.சி. நகர் சுற்றுப்பட்டு கிராமப் பகுதிகளின் மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
அன்றைய தினம் அப்பள்ளியில் வகுப்புகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. மதியம் நெருங்குகிற வேளையில் 8-ஆம் வகுப்பிலிருக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடங்களை எடுத்துக்கொண்டிருந்தார் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆசிரியை ரேவதி.
வகுப்பு முடியப்போகும் நேரம் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக் கிடையே திடீரென வாக்குவாதம் மேற்பட்டிருக்கிறது. ஒரு மாணவர் தனது பேக்கில் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவரின் தோள்பட்டை, கழுத்து, முதுகுப் பகுதியில் மாறி, மாறி வெட்ட... வகுப்பு மாணவர்களிடையே கூச்சல் குழப்பம். வெட்டுப்பட்ட மாணவன் ரத்தம் பீறிட கதறிக் கொண்டிருக்க, வகுப்பு முடிந்து வெளியே கிளம்பிய ஆசிரியை ரேவதி அலறல் சத்தம் கேட்டு பதற்றமாகத் திரும்பியவர், ஓடிப் போய் அரிவாளும் கையுமாக நின்ற மாணவனைத் தடுத்திருக்கிறார். அவர்மீது கோபமாகத் திரும்பிய மாணவன் ஆசிரியையும் இடது கையில் வெட்டியிருக்கிறான்.
இதையடுத்து பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் திரண்டுவந்து காயமடைந்த மாணவனை மீட்டு அந்தப் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். காயம்பட்ட ஆசிரியை ரேவதியும் அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வெட்டிய 13 வயதே ஆன 8-ஆம் வகுப்பு மாணவனோ கொஞ்சம் கூடப் பதற்றமில்லாமல் அருகிலுள்ள பாளை காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறான்.
இச்சம்பவத்தால் பாளையே பதட்டப்பட்டுக் கொண்டிருக்க சம்பவ இடம் வந்த மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பள்ளியிலிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
அதில் வெட்டுப்பட்ட 8-ஆம் வகுப்பு மாணவன் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன். அவனை வெட்டிய சக மாணவன் பாளையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவன் என தெரியவந்திருக்கிறது.
This story is from the April 19-22, 2025 edition of Nakkheeran.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Nakkheeran
Nakkheeran
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
குமுறும் பெண்கள்!
3 mins
November 19-21, 2025
Nakkheeran
தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!
“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”
5 mins
November 19-21, 2025
Nakkheeran
கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!
\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
காணாமல் போன அ.தி.மு.க.!
புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
தலைமறைவான சில்மிச டாக்டர்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
கைதி எண் 9658
ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!
அதிர்ச்சியில் விஜய்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.
2 mins
November 19-21, 2025
Translate
Change font size
