Try GOLD - Free
நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்
Kungumam Doctor
|October 01, 2024
உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குப் போய் பார்ப்பது என்பது ஓர் அக்கறையான செயல்பாடு. பாதிக்கப்பட்டவர் விரைந்து நலமடைய வேண்டும் என்பதன் மீதான நமது விழைவையும் அவர் மீதான நமது அக்கறையையும் வெளிப்படுத்தும் பாங்கு அது. ஆனால், ஆர்வக்கோளாறினாலோ அறியாமையினாலோ மருத்துவமனைக்குப் போகும் சிலர் அவர்களின் எல்லை எது என்று தெரியாமல் நடந்துகொள்கிறார்கள். இது நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சகநோயாளிகளையும் அவர்கள் உறவினர்க ளையும் சங்கடப்படுத்தி முக சுளிக்கச் செய்துவிடும். நோயுற்றவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கோ வீட்டுக்கோ செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.
1. நோய்த்தொற்றைத் தடுப்போம்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். 'உடனே சென்று பார்க்காமல் விட்டால் தவறாக நினைத்துக் கொள்ளுவார்கள்' என்று நினைத்து கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது. ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அல்லது இரண்டு பேர் போனால் போதும். 13 வயதுக்குக் கீழ், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவமனை செல்வதைத் தவிர்க்கலாம். ஏனென்றால் இந்த வயதினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோயாளியை விசாரிக்கப் போகும் இடத்தில் இவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், சளி போன்ற பிரச்னை இருப்பவர்களும் தவிர்க்க வேண்டும். அட்டெண்டர், நோயாளி, நர்ஸ் ஆகியோருக்கும் நமது உடல்நலக் குறைவால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
மருத்துவமனை செல்லும்போது ஆல்கஹால் சேர்க்கப்பட்ட 'ஹேண்ட் ரப்' கொடுப்பார்கள். அதைக் கண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். நோயாளியைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போதும் 'ஹேண்ட் ரப்' பயன்படுத்த வேண்டும். சோப்பைக் கொண்டு கைகளைக் கழுவுவதால் 95 சதவிகிதக் கிருமிகள் அழிகின்றன. தீக்காயமடைந்தவர்கள், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்களைப் பார்க்கும்போது ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். நலம் விசாரிக்கச் செல்லும் இடத்தில் நம்மால் நோயாளிக்கு எந்தத் தொந்தரவும் வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
2. பூச்செண்டு வேண்டாம்!
உடல்நலமில்லாதவர்களைப் பார்க்கச் செல்லும்போது பூச்செண்டு கொடுப்பது நல்லதல்ல. பூச்செண்டில் இருக்கும் சிறு பூச்சிகள் நோயாளிக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். பூஞ்சைகள் நோய்த்தொற்றை உண்டாக்கலாம். சிலர் உணவு சமைத்து எடுத்துச் செல்வார்கள். கிட்னி மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் உப்பு, காரம், இனிப்பு குறைத்துப் பத்தியச் சாப்பாடு கொடுப்பார்கள். வீட்டில் சமைத்து எடுத்துச் செல்லும் உணவில் உப்பும் காரமும் அதிகமாக இருக்கும். அந்த உணவை நோயாளி சாப்பிடுவதால் அவர் குணமடையும் காலம் தள்ளிப்போகும். எனவே, வீட்டிலிருந்து கொண்டு செல்லும் உணவை நோயாளிக்குக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
This story is from the October 01, 2024 edition of Kungumam Doctor.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Kungumam Doctor
Kungumam Doctor
எளிய வீட்டு வைத்தியம்!
நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!
சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.
1 mins
April 16-30, 2026
Kungumam Doctor
கார்கூந்தல் பெண் அழகு!
பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
3 mins
April 16-30, 2026
Kungumam Doctor
மைக்ரேன் தீர்வு என்ன?
இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!
முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
சிக்கரி ஓர் அரு மருந்து!
காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!
இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
உடல் சூட்டை தணிக்கும் புதினா!
புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
தைராய்டு அறிவோம்
இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2 mins
April 16-30, 2026
Translate
Change font size

