Versuchen GOLD - Frei
பக்தர்களை அன்புடன் அரவணைக்கும் பதுவை பதியரான புனித அந்தோனியார்
Virakesari Daily
|June 13, 2025
"பாதுவா நகரிலே உதித்தீர் முனிவரே... பாமாலை சூடினோம் கனிவாய் ஏற்பீரே...!" செவ்வாய்க்கிழமைதோறும் கொழும்பு கொச்சிக்கடை வட்டாரத்தில் மூன்று வேளையும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்தான் இது. இப்பாடல் காலையில் தமிழிலும் நண்பகலில் ஆங்கிலத்திலும் மாலையில் சிங்களத்திலும் பாடப்படுவது சிறப்பம்சமாகும். லட்சக் கணக்கான பக்தர்களை ஆலயம் நோக்கி வரச்செய்வதும் இப்பாடல் என்றால் கூட அது மிகையல்ல.
செவ்வாய்க்கிழமை என்றாலே கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய சுற்று வட்டாரம் விழாக்கோலம் பூண்டுவிடும். அப்படியிருக் கும்போது, புனிதரின் திருவிழா என்றால் கொண்டாட்டத்துக்குக் கேட்கவா வேண்டும்?
கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் திருவிழா தினம் வரை கொச் சிக்கடை கோலாகலமாகவே காட்சிதரும் என்பதில் ஆச்சரியம் எதுவு மில்லை. புனித அந்தோனியார் ஆலய 191 ஆவது வருடாந்த திரு விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
புனிதரின் பிறப்பு
பதுவை பதியரான புனித அந்தோனியார், புனித பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குருத்துவராவார். இவரது பிறப்பிடம் லிஸ்பன் நகராக இருந்தாலும் உலக மக்கள் அனைவராலும் இவர் 'பதுவைப்ப தியர்' என்றே அழைக்கப்படுகிறார். இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் புனிதர் தமது இறுதி நாட்களைக் கழித்ததாக வரலாறு கூறுகிறது. அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவர் இறந்த சில வருடங்களிலேயே இவருக்குப் பட்டம் பெற வாய்ப்பாக அமைந்தது இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் தான்.
புனிதர் மரித்த இன்றைய தினமே(ஜூன் 13) அவருக்குத் திருவிழா எடுக்கும் நாளாக திருச்சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரில் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி புனிதர் பிறந்தார். அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி ஆகியோருக்கு மூன் றாவதாகப் பிறந்த குழந்தையே புனித அந்தோனியார். இவரது இயற் பெயர் பேர்டினாண்ட் மார்ட்டின் என்பதாகும்.
Diese Geschichte stammt aus der June 13, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
