Versuchen GOLD - Frei

மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!

Dinamani Coimbatore

|

May 11, 2025

தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.

- -ந.முத்துமணி

வட சென்னையைச் சேர்ந்த இவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலில் முனைவர் பட்டமும், தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனது ஆராய்ச்சிப்பணிகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம், கவிதைகள் என 13 புத்தகங்களை தமிழில் எழுதியிருக்கிறார்.

வியாசர்பாடியில் 'கலாம்-சபா' என்ற இளையோர் நூலகம்-வழிகாட்டி மையத்தை அமைத்திருக்கும் அவர், நாட்டில் புதிய அறிவியல் எழுச்சியை ஏற்படுத்த மாணவர்கள், இளைஞர்களைத் தவறாமல் சந்தித்து வருகிறார்.

அவரிடம் ஒரு சந்திப்பு:

தேசியத் தொழில்நுட்பத் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

1998 மே 11-இல் போக்ரானில் அணுசக்தி சோதனையில் இந்தியா வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி, பல துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி தேசத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்த மே 11-ஆம் தேதி தேசியத் தொழில்நுட்பத் தினமாக, 1999-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

2001-இல் நிகழ்ந்த தேஜஸ் போர் விமானத்தின் முதல் வெள்ளோட்டம், 2008-இல் நடைபெற்ற சந்திரயான்-1 வெற்றி, 2012-இல் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை வெற்றி, 2019-இல் பெற்ற செயற்கைக்கோள் எதிர் ஏவுகணை 'சக்தி திட்டம்' வெற்றி, 2024-இல் நிகழ்ந்த சந்திரயான்-3 வெற்றி என இந்தியா தொழில்நுட்பத் தேசமாக தற்போது உலக அரங்கில் மிளிர்கிறது. இதைப் போல இன்னும் பல துறைகளில் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இளையோரை ஆற்றுப்படுத்த தேசியத் தொழில்நுட்ப தினம் உத்வேகம் தரும்.

ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பெயர்கள் பேசப்பட்ட இந்திய வகுப்பறைகளில், பின்னர் சி.வி.ராமன், விக்ரம் சாராபாய் போன்ற இந்தியப் பெயர்களும் சேர்த்து உச்சரிக்கப்பட்டன. படிப்படியாக அப்துல் கலாம், எம்.எஸ். சுவாமிநாதன், சிவதாணுப்பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, கே.சிவன் போன்ற இந்தியர்கள் பேசப்படுவது சுதந்திர இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வேர்களின் நீளத்தை அளக்காமலே நமக்கு அறிவிக்கிறது. இவர்கள் தமிழர்கள் என்பதில் நாம் மார்தட்டிக் கொள்ளலாம்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore

Dinamani Coimbatore

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 48 பேர் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 48 பேர் காயமடைந்தனர்.

time to read

1 mins

January 18, 2026

Dinamani Coimbatore

கருவறைக் கடவுளரைக் காட்டிடும் சுதைச் சிற்பங்கள்!

\"ஊருக்கு அடையாள மையமாக விளங்குவது கோயில்.

time to read

2 mins

January 18, 2026

Dinamani Coimbatore

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வங்கதேசத்தை சனிக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

January 18, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

திருக்குறள் காட்டும் அரசியல் நெறி

உலக மொழிகளில் தமிழ் மொழியில் இருப்பதுபோல் நீதி நூல்கள் எந்த மொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதலில் கூறியவர் வீரமாமுனிவர்.

time to read

2 mins

January 18, 2026

Dinamani Coimbatore

மண்ணின் கலைகளைச் சுமப்பேன்...

\"மண்ணின் கலைகளைச் சுமப்பதிலும், அடுத்தத் தலைமுறைக்குக் கடத்து திலும் எனக்கு அதிக அளவில் விருப்பம்.

time to read

1 min

January 18, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

உச்சகாரம் இரு மொழிக்கு உரித்தே...

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே தோன்றிய பூச்சியினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினமே கொசுவாகும்.

time to read

1 mins

January 18, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.

time to read

1 min

January 18, 2026

Dinamani Coimbatore

‘ஒளியை - ஒலியாகவும், ஞானமாகவும் காண்கிறேன்’

இந்தோனேசியாவில் ஜகார்தாநகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் வர்த்தகம் மற்றும் அரசியல் பிரிவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெனோ சஃபைன்.

time to read

3 mins

January 18, 2026

Dinamani Coimbatore

ஜீவாவின் சுவாசம் தமிழ்!

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது.

time to read

3 mins

January 17, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

58 பேர் காயம்

time to read

1 mins

January 17, 2026

Translate

Share

-
+

Change font size