يحاول ذهب - حر
மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!
May 11, 2025
|Dinamani Coimbatore
தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.
வட சென்னையைச் சேர்ந்த இவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலில் முனைவர் பட்டமும், தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனது ஆராய்ச்சிப்பணிகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம், கவிதைகள் என 13 புத்தகங்களை தமிழில் எழுதியிருக்கிறார்.
வியாசர்பாடியில் 'கலாம்-சபா' என்ற இளையோர் நூலகம்-வழிகாட்டி மையத்தை அமைத்திருக்கும் அவர், நாட்டில் புதிய அறிவியல் எழுச்சியை ஏற்படுத்த மாணவர்கள், இளைஞர்களைத் தவறாமல் சந்தித்து வருகிறார்.
அவரிடம் ஒரு சந்திப்பு:
தேசியத் தொழில்நுட்பத் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
1998 மே 11-இல் போக்ரானில் அணுசக்தி சோதனையில் இந்தியா வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி, பல துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி தேசத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்த மே 11-ஆம் தேதி தேசியத் தொழில்நுட்பத் தினமாக, 1999-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
2001-இல் நிகழ்ந்த தேஜஸ் போர் விமானத்தின் முதல் வெள்ளோட்டம், 2008-இல் நடைபெற்ற சந்திரயான்-1 வெற்றி, 2012-இல் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை வெற்றி, 2019-இல் பெற்ற செயற்கைக்கோள் எதிர் ஏவுகணை 'சக்தி திட்டம்' வெற்றி, 2024-இல் நிகழ்ந்த சந்திரயான்-3 வெற்றி என இந்தியா தொழில்நுட்பத் தேசமாக தற்போது உலக அரங்கில் மிளிர்கிறது. இதைப் போல இன்னும் பல துறைகளில் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இளையோரை ஆற்றுப்படுத்த தேசியத் தொழில்நுட்ப தினம் உத்வேகம் தரும்.
ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பெயர்கள் பேசப்பட்ட இந்திய வகுப்பறைகளில், பின்னர் சி.வி.ராமன், விக்ரம் சாராபாய் போன்ற இந்தியப் பெயர்களும் சேர்த்து உச்சரிக்கப்பட்டன. படிப்படியாக அப்துல் கலாம், எம்.எஸ். சுவாமிநாதன், சிவதாணுப்பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, கே.சிவன் போன்ற இந்தியர்கள் பேசப்படுவது சுதந்திர இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வேர்களின் நீளத்தை அளக்காமலே நமக்கு அறிவிக்கிறது. இவர்கள் தமிழர்கள் என்பதில் நாம் மார்தட்டிக் கொள்ளலாம்.
هذه القصة من طبعة May 11, 2025 من Dinamani Coimbatore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Coimbatore
Dinamani Coimbatore
ஏஓ ஓஸாகா, ரைபகினா, சின்னர், சிட்சிபாஸ் முன்னேற்றம்; மொன்பில்ஸ் ஓய்வு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
January 21, 2026
Dinamani Coimbatore
பேரவையிலிருந்து ஆளுநர் மீண்டும் வெளியேறினார்
13 குற்றச்சாட்டுகளுடன் ஆளுநர் மாளிகை விளக்கம்
1 min
January 21, 2026
Dinamani Coimbatore
WPL மும்பையை வீழ்த்தியது டில்லி
டபிள்யுபிஎல் தொடரின் ஒருபகுதியாக மும்பை இண்டியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டில்லி கேபிட்டல்ஸ் அணி.
1 min
January 21, 2026
Dinamani Coimbatore
சர்வதேச கண் அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவராக டாக்டர் சூசன் ஜேக்கப்
கருவிழி ஒளி விலகல் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மருத்துவ அமைப்பின் (ஐஎஸ்ஆர்எஸ்) தலைவராக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணர் சூசன் ஜேக்கப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1 min
January 21, 2026
Dinamani Coimbatore
இடைநிலை ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினால் தன்னிச்சையாக அனுமதிக்க வேண்டாம்
பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
1 min
January 21, 2026
Dinamani Coimbatore
'ஜனநாயகன்' தணிக்கை சான்று: மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று வழங்க தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min
January 21, 2026
Dinamani Coimbatore
டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; உற்சாகத்தில் நியூஸிலாந்து
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன்கிழமை (ஜன.
1 mins
January 21, 2026
Dinamani Coimbatore
பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு
பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
1 mins
January 21, 2026
Dinamani Coimbatore
கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி: லடாக், ஐடிபிபி அணிகள் அபாரம்
லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.
1 min
January 21, 2026
Dinamani Coimbatore
அநீதிக்கு எதிராக மௌனம் காக்கும் நாடுகள் முன்னேறாது: ராகுல்
அநீதிக்கு எதிராக மௌனம் காக்கும் நாடுகள் முன்னேறாது' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
January 20, 2026
Translate
Change font size

