استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة
The Perfect Holiday Gift Gift Now

ஆவணியின் அவதார தரிசனம்... கிருஷ்ணர்- விநாயகர்!

August 2025

|

Penmani

அருள் தழுவும் ஆயிரம் நாமங்களைக் கொண்டு அகிலத்தைக் காக்க எடுத்த புண்ணிய அவதாரம் ஸ்ரீகிருஷ்ண அவதாரம்!

- - மாலதி சுந்தரராஜன்

ஆவணியின் அவதார தரிசனம்... கிருஷ்ணர்- விநாயகர்!

சக்ரத்தை எடுப்பது ஒரு கணம், தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, தர்மத்தை நிலைநாட்ட எடுத்த அற்புத அவதாரம் கிருஷ்ண அவதாரம்! மக்களின் நல்லரசனாய், கீதையை உலகுக்கே உபதேசித்த நல்லாசானாய், நட்பிற்கு இலக்கணமான நல்ல நண்பனாய், அடியார்களுக்கு உதவும் சேவகனாய், இடம், பொருள், ஏவல் அறிந்த சிறந்த மந்திரியாய், பண்பிலே தெய்வமாய் பரிமளிக்கும் அவதார நாயகன் கிருஷ்ணன்!

ஆவணி மாதம் அஷ்டமித் திதியில், ரோகிணி நட்சத்திரத்தில், நடு நிசியில் இருண்ட சிறைச் சாலையில், தேவகி நந்தனாக, ஞான ஒளியாக சங்கு சக்ரதாரியாக, அவதரித்தார் கிருஷ்ண பகவான்! ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர, அந்தகாரமான அந்த இரவில் கொட்டும் மழையில், பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து யசோதைக்கு மகனாய்ப் போய்ச் சேர்ந்தார்! நந்தகோபன்குமாரனாக, யசோதையின் இளம் சிங்கமாக கோகுலத்தில் எல்லோரும் விரும்பும் விஷமக்காரக்கண்ணனாக வளர்ந்து

வந்தார்பரந்தாமன்! கண்ணனின் குறும்பு விளையாட்டுகளில் இன்றும் மனதை பறி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்! ஸ்ரீ ராம அவதாரத்தில், மனிதனாக வாழ்ந்து காட்டினார் விஷ்ணு பகவான்; ஆனால் கிருஷ்ண அவதாரத்தில் மனித தெய்வமாக வாழ்ந்து காட்டினார்! கோவிந்தனை, கண்ணனை,பரமாத்ம சொரூபமாகவே கண்டு மகிழ்கிறோம்! விலங்கினம் முதல் தேவர் இனம் வரை அவன் பாதார விந்தங்களில் சரணடைந்தோர்க்கு சஞ்சலம் இல்லை! கஜேந்திரனின் ஆதிமூலமே என்ற நிர்கதியான அலறலைக் கேட்ட பரந்தாமன், பறந்தோடி வந்து தன் சக்ராயுதத்தால் கஜேந்திரனின் காலை பிடித்த முதலையை வதம் செய்து யானையை காப்பாற்றிய சுவையான நிகழ்வு நாம் அனைவரும் அறிந்ததே! வாரணம் அழைக்க வந்த காரணன் என்ற சிறப்பு அடைமொழியுடன் போற்றுகிறார் வேதாந்த தேசிகர்! இது வெறும் கதையல்ல! சரணாகதி தத்துவத்தின் பெருமையை விளக்கும் உயர்ந்த நிகழ்வு கஜேந்திர மோட்சம்!

المزيد من القصص من Penmani

Penmani

Penmani

தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!

தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....

time to read

7 mins

October 2025

Penmani

Penmani

தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!

அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

ஆலங்காட்டு ரகசியம்!

சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.

time to read

1 min

October 2025

Penmani

நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்

ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.

time to read

3 mins

October 2025

Penmani

குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!

இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!

தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.

time to read

4 mins

October 2025

Penmani

Penmani

இனிப்பு பிறந்த கதை

இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!

யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

தீபாவளி பூ!

இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.

time to read

1 min

October 2025

Penmani

மதுரையில் மஹா பெரியவர் கோயில்!

திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!

time to read

1 min

October 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back