يحاول ذهب - حر
காதல் கனவே...!
March 12, 2025
|Kanmani
மார்கழி மாத மாலைப் பொழுதில்... நகர் முழுவதுமே பனிப் பொழிவால் மூடப்பட்டிருந்தது.
எதிரே போவோர் வருவோர் அனைவருமே பனி மனிதனாகவும், நிறமற்றவர்களாகவும் காட்சியளித்துக் கொண்டு இருந்தார்கள்.
வீதியில் நிறுத்தப்பட்ட கார்களோ, பனிப் பொழிவால், சிறு பனிக் குன்றுகளைப் போல காட்சியளித்துக் கொண்டிருந்தது.
சூரியனோ, தனது பணியை மாலை வேளையில் விரைவாகவே முடித்துக் கொண்டு ஓய்வெடுக்க சென்றுவிட்டது. பனிப் பொழிவால், தெரு விளக்குகள் இருள்வதற்கு முன்பாகவே ஒளிர ஆரம்பித்திருந்தது.
சென்னை மாநகரில், சற்று ஒதுக்குப்புறமாகவும்,கிராமிய மணம் மாறாமல் இருக்கும் இடம்தான் கதிர்வேடு .அங்கு ஆள் ஆரவாரமில்லாத இடத்தில் இருக்கிறது துர்கைதேவி ஆலயம்.
புதுப்பிக்கப்படாத, வண்ணப் பூச்சுகள் பார்க்காத ஆலயம்,மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிது என்பார்களே.. அதுபோல, உருவத்திலும், வளர்ச்சியிலும் பார்த்தால், சிறிய ஆலயம் போன்று தோன்றினாலும், உள்ளே வீற்றிருக்கும் அம்மனின் சக்தியும்,அவள் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் மிகப் பெரியது.
குளிர்காலம் என்பதால், கோவிலுக்குள் கூட்டம் அதிகமில்லை, ஆங்காங்கே ஒரு சில பக்த,பக்தைகள், உடலில் கம்பளி ஆடையை போர்த்தி, உடல் குளிர்ச்சியை தணிக்கும் வகையில், கைகள் இரண்டையும், அழுத்தமாக தேய்த்து, கன்னத்தில் வைப்பதும், கை அக்குளுக்குள் வைத்து, உடலை உஷ்ணமாக்கும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த கூட்டத்தின் நடுவே தனியாக தெரிந்தாள் அனிதா.
வந்தவர்களில் அவள் மட்டுமே அரிதாரம் பூசிக் கொள்ளாத, கம்பளி ஆடையணியாத பக்தை. குழப்பத்தில், கண்களைமூடி தியானித்திருந்தாள். அவளது உடலைப்போல மனமும் சோர்வாகயிருந்தது. சோர்வானாலும், அவளது இருபது இள வயதானது, முகத்தில் தனிப் பொலிவோடு காணப்பட்டது.
அர்ச்சகரோ, தனது பணியில் கவனம் செலுத்தும் விதமாக, அம்மனை அலங்காரம் செய்து, மேலும் அழகூ ட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கையில் ஆயுதமின்றி, பக்தர்களுக்கு ஆசி வழங்கும் விதமாக அபய முத்திரையை கைகளிலும், சாந்த சொரூபத்தை விழிகளிலும், மலர்ச்சியை முகத்திலும், தைரியத்தையும், நம்பிக்கையையும் தனது உடலிலும், தேக்கி வைத்திருந்த, அம்மனோ, துன்பத்திலும், மனக் குழப்பத்திலும் வரும் பக்தர்களின் குறை தீர்த்து, அரவணைத்து அருள்பாலிக்கக் காத்துக் கொண்டிருந்தாள்.
هذه القصة من طبعة March 12, 2025 من Kanmani.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Kanmani
Kanmani
நடிகனாக விடைபெற்ற இமயம்!
தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.
3 mins
June 24, 2026
Kanmani
மூன்றெழுத்து மந்திரம்!
நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.
3 mins
June 24, 2026
Kanmani
தூக்கம் ஏன் கெடுகிறது?
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
3 mins
June 24, 2026
Kanmani
ஹபீபி
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
1 mins
June 24, 2026
Kanmani
மண்ணின் பிள்ளை!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.
2 mins
June 24, 2026
Kanmani
தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !
விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.
1 min
June 24, 2026
Kanmani
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
June 24, 2026
Kanmani
டபுள் ஆக்ஷன்
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
1 mins
June 24, 2026
Kanmani
வெண்டை புளி குழம்பு!
சமையல்
1 mins
June 24, 2026
Kanmani
கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!
இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
2 mins
June 24, 2026
Translate
Change font size
