يحاول ذهب - حر
அழிவின் விளிம்பில் கழுகுகள்!
September 06, 2025
|Dinamani Pudukkottai
தடைசெய்யப்பட்ட நீம்சலைடு, புளுநிக்ஸின் மற்றும் கார்புரோபென் ஆகிய மருந்துகளை கால்நடைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் செலுத்துவதால் அவை இறந்த பிறகு அவற்றின் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் அதிக அளவில் உயிரிழப்பதாக கழுகு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இயற்கையின் சுற்றுச்சூழலைக் காப்பதில் பறவைகளுக்கு தனி இடம் உண்டு. பறவைகளின் அரசனான கழுகுகள் சுற்றுச்சூழல் மாசடைதலைத் தடுக்கவும், இயற்கை விவசாயம், கிராமப்புற சூழல்களைத் தக்கவைக்கவும் மனிதர்களுக்கு உதவுகின்றன. குறிப்பாக, கரிமக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் அகற்றுவதில் அவை துப்புரவாளர்களாகச் செயல்படுகின்றன. அப்படிப்பட்ட அந்த இனம், உலகில் வேகமாக அழிந்து வருகிறது.
அசைவப் பறவையான கழுகு, பொது இடங்கள், காடுகளில் இறந்து கிடக்கும் விலங்குகளின் இறைச்சியை உண்டு, உலகின் தூய்மைப் பணியாளராக வானில் வலம் வந்து வனத்தையும், வனாந்திரத்தையும் தூய்மையாக வைத்து, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துகிறது. இறந்த கால்நடைகளை உண்டு, இதன் மூலம் மனிதர்களிடையே தொற்று நோய்கள் பரவுதலைத் தடுக்க உதவுகிறது. வெறி நாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற மிகவும் நச்சுத்தன்மையுள்ள நோய்க்கிருமிகளின் பாதிப்புகளிடமிருந்து காத்துக்கொள்ளும் திறன் கழுகுக்கு உண்டு.
இந்தியா முழுவதும் மொத்தம் ஒன்பது வகையான கழுகு இனங்கள் உள்ளன. அதிகமாகக் காணப்படும் வெள்ளைத்தலை கழுகு முதல் காட்டில் வாழும் சிவப்புத் தலை கழுகு வரையிலான இனங்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழலைக் காப்பதில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. இமயமலை கிரிஃபோன் மற்றும் தாடியுள்ள கழுகு போன்றவை பொதுவாக இமயமலையின் உயரமான பகுதிகளில் காணப்படுகின்றன.
எகிப்திய கழுகு கிட்டத்தட்ட நாடு முழுவதும் காணப்படுகிறது. மெல்லிய அலகுள்ள கழுகுகள் வடக்கு சமவெளி களிலும், அஸ்ஸாம் பள்ளத்தாக்கிலும் காணப்படுகின்றன. இந்தியக் கழுகுகள் இந்தியாவின் மத்திய மற்றும் தீபகற்ப பகுதிகளில் பரவியுள்ளது. சினீரியஸ் மற்றும் யூரேசியன் கிரிஃபான் இனக் கழுகுகள் இந்தியாவுக்கு குளிர்கால விருந்தினர்களாக வருகின்றன. அனைத்து வகையான கழுகுகளும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் பட்டியலிடப்பட்டுள்ளன.
விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நச்சு மருந்துகளால் இறக்கும் எலிகள் மற்றும் கால்நடைகளை உண்பதால் இறத்தல், உயர் அழுத்த மின்கம்பிகளில் சிக்கி மடிதல், காடுகளின் அழிவு முதலியன கழுகு இனங்கள் அருகி வருவதற்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன.
هذه القصة من طبعة September 06, 2025 من Dinamani Pudukkottai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Pudukkottai
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Pudukkottai
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Pudukkottai
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Pudukkottai
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
October 31, 2025
Dinamani Pudukkottai
இரட்டைப் பெருமை!
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
2 mins
October 31, 2025
Dinamani Pudukkottai
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Translate
Change font size
