يحاول ذهب - حر
மாயாஜால மன்னன் விட்டலாச்சார்யா
June 08, 2025
|Dinakaran Nagercoil
இப்போதுள்ள சினிமாவில் நாம் என்ன நினைக்கிறோமோ அதை எளிதில் காட்சிப்படுத்தக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும் நம்மால் கிராபிக்ஸ், விஎஃப்எக்ஸ் போன்ற தொழில்நுட்பத்தால் கொண்டுவர முடியும். ஆனால் இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத அந்த காலத்தில் ஒரு இயக்குனர் திரையில் மாயாஜால விஷயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். ஃபிலிமில் ஒளிப்பதிவு செய்து அதில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொண்டுவருவது அத்தனை சுலபம் அல்ல. இதை படத்துக்கு படம் செய்தவர் இயக்குனர் விட்டலாச்சார்யா. இவரது பெயரை போஸ்டர்களில் பார்த்தாலே கதையில் எந்தவொரு லாஜிக்கும் பார்க்காமல் மக்கள் சினிமா கொட்டகையை நோக்கி சென்ற காலம் அது.
-
விட்டலாச்சார்யாவின் சினிமா ஆர்வம்
விட்டலாச்சார்யா அன்றைய மதராஸ் மாகாணம் (இன்றைய கர்நாடகா மாநிலம்) உடுப்பியில் உள்ள உதயவாரா என்ற கிராமத்தில் 1920ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு சிறு, சிறு வேலைகள் செய்து வந்தார். பின்னர் உடுப்பியில் சொந்தமாக ஹோட்டல் தொடங்கி நடத்தி வந்தார். 1942ல் 'வெள்ளையனே வெளியேறு' என்ற பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு பெங்களூரு சிறையில் 7 மாதம் இருந்த விட்டல் சுதந்திரத்திற்கு பிறகு காந்தியின் வேண்டுகோளின்படி அரசியலில் இருந்து விலகிவிட்டாராம்.
சிறை தண்டனைக்குப் பிறகு வெளியே வந்து 'டூரிங் சினிமா' என்கிற சினிமா கொட்டகையைத் தொடங்கினார். அங்கு வெளியிடப்படும் படங்களைப் பார்த்து அவருக்கு சினிமா மீது ஆசை ஏற்பட்டது. அதற்காக நிறைய படங்களைப் பார்த்து அது எப்படி உருவாக்கப்படுகிறது என்ற நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டார்.
விட்டலாச்சார்யாவின் சினிமா பயணம்
சினிமாவுக்குள் வருவதற்கு முன்னரே அதைப்பற்றி நன்கு அறிந்து கொண்டு வந்தவர் விட்டலாச்சார்யா. 1952ம் ஆண்டு கன்னடத்தில் தனது முதல் படத்தை சொந்தமாக தயாரித்து, இயக்குகிறார். அப்படத்தின் பெயர் ‘ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம்'. அதனைத் தொடர்ந்து 1953ல் 'ராஜ்ய லட்சுமி', 1954ல் 'கன்யாதானம்', 1956ல் 'முட்டிடே பாக்யா' எனத் தொடர்ந்து 4 படங்களை கன்னடத்தில் தயாரித்து இயக்கினார். இதில் 'கன்யாதானம்' என்ற படத்தில் கருப்பாக இருக்கும் பெண் அனுபவிக்கும் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியிருப்பார்.
1956ல் தெலுங்கு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைக்கும் விட்டல் தனது முதல் தெலுங்கு படமான 'ஒத்தண்டபெல்லி' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் 'அண்ணா செல்லலு', 'பெல்லி மீடா பெல்லி', 'வரலட்சுமி விரதம்', 'பந்தி போட்டு' உள்ளிட்ட படங்களை இயக்கினார். 1959ம் ஆண்டு வெளியான 'பெண் குலத்தின் பொன்விளக்கு' என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.
3டி படம்
இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்' 1984ம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டில் இயக்கிய 'ஜெய் வேதாளம்' என்ற 3டி திரைப்படம் தமிழ், தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
هذه القصة من طبعة June 08, 2025 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

