Facebook Pixel ஆதிரை நன்னாளும் ஆதித்தன் திருநாளும் ! | Penmani - womens-interest - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

ஆதிரை நன்னாளும் ஆதித்தன் திருநாளும் !

Penmani

|

January 2023

திருவாதிரைத் திருவிழா

- மாலதி சுந்தரராஜன்

ஆதிரை நன்னாளும் ஆதித்தன் திருநாளும் !

வேதங்கள் ஆட,மிகு ஆகமமாட,கீதங்கள் ஆட, கிளர் அண்டம் ஏழாட, பூதங்கள் ஆட, புவனம் முழுதாட, நாதங் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே... என்று திருமூலர் வர்ணிக்கும் ஆனந்தத் தாண்டவமாடும் நடராஜப் பெருமானுக்கு உகந்த நாள் ஆதிரை நன்னாள் அதாவது, திருவாதிரை என்று போற்றப்படும் திருநாள்! சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை. அதனாலேயே அவருக்கு ஆதிரையான் என்ற திருநாமம் உண்டு.

திருவாதிரைத் திருவிழா ஆருத்ரா தரிசன விழாவாக எங்கும் கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாக இருப்பது எம்பிரான் சிவபெருமானின் ஆனந்த நடனம் தான். அவர் நடனம் தான் உலகை வாழ்விக்கிறது. நமது இயக்கத்தின் ஆதார சுருதியே அவரது இயக்கம்தான்! மார்கழி மாதம் தட்க்ஷிணாயத்தின் இறுதி மாதமாகும். இக்காலத்தில் சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்று மாதவன் கூறுவதற்கேற்ப மார்கழி மாத பூஜை பெருமாள் கோவில்களிலும் சிவனார் மனம் குளிர சிவன் கோவில்களிலும் விடியற் காலையில் நடைபெறுவது வழக்கம். இவ்வதிகாலை வழிபாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமை ஸ்ரீ ஆண்டாள்,  மாணிக்கவாசகப் பெருமான் ஆகிய இருவரையும் சேரும். அவர்கள் இயற்றிய திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களில் அரியையும் அரனையும் போற்றித் துதித்து அந்த பக்தி மழையில் நம்மையும் நனையச் செய்கின்றனர்.

திருவெம்பாவையில் மாணிக்க வாசகர்,பெண்கள் வீடுவீடாகச் சென்று தோழிகளின் துயில் மயக்கத்தை தெளிவித்து, தேசன், சிவலோகன் தில்லை சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய் என்று பாடி கருணைக் கடலான தில்லை நாதனை சரணடையச் செய்கிறார். திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் ஓங்கி உலகளந்த உத்தமன்பேர்பாடி பாவை நோன்பு பூண்டு,கோல விளக்கே!, கொடியே!, விதானமே! ஆலின் இலையாய்! அருளேலோரெம்பாவாய் என்று மனமுருகிப் பாடி, பரந்தாமனைக் கைப்பற்றுகிறாள். இரண்டு பாசுரங்களும் பக்தியுடன் மார்கழி நீராடி, இறைவனை அடையும் மேன்மையை எடுத்துரைக்கின்றன.

Penmani'den DAHA FAZLA HİKAYE

Penmani

Penmani

அணியும் உடையில் அழகின் ரகசியம்!

ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நாவிற்கினிய ஜாம் வகைகள்!

பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நல் வாழ்விற்கு யோகா..

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!

time to read

4 mins

June 2026

Penmani

Penmani

பிரபலங்களின் சுவாரசியங்கள்!

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!

இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.

time to read

2 mins

June 2026

Penmani

Penmani

பூக்கூடை

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

time to read

1 mins

June 2026

Penmani

முத்துச்சிதறல்

மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.

time to read

1 mins

June 2026

Penmani

Penmani

வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்

பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

ஆழ்மனதின் அற்புதம்!

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.

time to read

1 min

June 2026

Translate

Share

-
+

Change font size