ஜிலேபி...சமோசா...என்னதான் பிரச்சினை?
Kanmani
|July 30, 2025
இந்தியாவில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவ மனைகளிலும், உணவுப் பொருட்களில் இருக்கும் எண்ணை மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்று சமீபத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு பட்டியலிட்டவற்றில், அனைவரும் விரும்பி சாப்பிடும் சமோசா, ஜிலேபி ஆகியவை தீங்கான உணவாக இடம் பெறுகிறது. சமோசா, ஜிலேபி ஆகியவை விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என்றும் கருதப்படுகிறது.
நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கு இந்த இரு சிற்றுண்டிகளும் காரணமாவதாக பெரும்பாலான மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனாலும் சிகரெட் வரிசையில் சமோசா, ஜிலேபிக்கும் எச்சரிக்கை வாசகம் வர உள்ளதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
உடல் பருமனை குறைக்கப் போதுமான எண்ணெய், சர்க்கரையின் அளவு தொடர்பாகத்தான் எச்சரிக்கை வாசகம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதற்கு காரணம், இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-இல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
2050-ஆம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகளே பெரும்பாலும் உடல் பருமனுக்கு காரணமாகிறது.
எவ்வாறாயினும், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் பருமன் ஒரு அமைதியான தொற்றுநோயாக மாறியுள்ளது.குறிப்பாக, சமோசா, ஜிலேபியில் அதிகமான மாவுச்சத்து, கொழுப்பு, சர்க்கரை இருக்கின்றன. இவற்றில் மட்டுமல்ல, பிரெட், ஜெல், ஜாம், டோனட், வடாபாவ், பாக்கெட் சிப்ஸ் என பல நொறுக்குத் தீனிகளில் இம்மூன்று கேடுகளும் உள்ளன.
ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகள், இனிப்பு மிகுந்த பலகாரங்கள் சாப்பிடுவதாலும் உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமனால் மூட்டு வலி, இரைப்பை, குடல் பிரச்சினைகளோடு, இதய நோய்களும் வரும் அபாயம் உள்ளது.

Bu hikaye Kanmani dergisinin July 30, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Kanmani'den DAHA FAZLA HİKAYE
Kanmani
அம்மா ஒரு துளசிச் செடி!
புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.
3 mins
December 17, 2025
Kanmani
லிவிங் டூ கெதர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?
ஆண்,பெண் நட்பு என்பது இன்று சகஜமாகிவிட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அலுவலகம் வரை அது நடைமுறையில் உள்ளது. காதல் என்பதை தாண்டி டேட்டிங், லிவிங் டூகெதர் என்றல்லாம் பல்கிப் பெருகிவிட்டதைக் காண முடிகிறது
1 min
December 17, 2025
Kanmani
நேர்மறை உளவியலின் தூண்கள்!!
நேர்மறை உளவியலில் நாம் இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்துமே ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவும் அம்சங்கள்.
3 mins
December 17, 2025
Kanmani
இந்தியாவின் தூய்மை கிராமத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை!
மகாராஷ்டிராவில் உள்ள சதாரா கிராமம், கிராமப்புற இந்தியா எவ்வாறு தன்னிறைவு பெற்றதாகவும் அழகாகவும் இருக்க முடியும் என்பதை முன்னுதாரணமாக காட்டுகிறது.
1 mins
December 17, 2025
Kanmani
ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!
ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.
1 mins
December 17, 2025
Kanmani
ஸ்மார்ட் போன் டேக் ஓவர் மோசடி!
செல்போனில் பலவகை மோசடிகள் செய்யப்படுவது ஊரறிந்த செய்தி. அதில் எப்போதும் போல், போலி சிம் கார்டு மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய தனி நபர்களின் மொபைல் போன் எண்களை மோசடி நபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதால்...
3 mins
December 17, 2025
Kanmani
ரசிகர்களின் விருப்பங்கள் வேறு பட்டவை!
சம்யுக்தா மேனன் நடித்து இந்த 2025ம் வருடம் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்றாலும் ரொம்பவே மகிழ்ச்சியான ஆண்டு என்கிறார்.
2 mins
December 17, 2025
Kanmani
தொடர்ந்து குறையும் ரூபாய் மதிப்பு... ஏன்?
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக ஒருபுறம் பெருமை பேசும் அதேவேளை, மற்றொரு புறம் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் குறைந்து வரும் துயரம் தொடர்கிறது.
3 mins
December 17, 2025
Kanmani
அங்கம்மாள்
பழைய கால பழக்க வழக்கங்களில் இருந்து மாறாத ஒரு தாய், தன் இயல்பை மாற்றிக்கொள்ள வற்புறுத்தும் பிள்ளைகளின் அழுத்தத்தால் சந்திக்கும் மனச்சிக்கல்களே கதை.
2 mins
December 17, 2025
Kanmani
சமச்சீரற்ற சாப்பாட்டால் ஏற்படும் சங்கடங்கள்
உணவே உடல் நலத்திற்கு அடிப்படை. ஆனால் சமச்சீரான உணவை போதுமான அளவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
1 min
December 17, 2025
Translate
Change font size

