Denemek ALTIN - Özgür
முஸ்லிம் அறக்கட்டளைகள் மீதான வக்பு சபையின் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு
Vidivelli Weekly
|May 15, 2025
முஸ்லிம் தொண்டு நிறுவனங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தத்தின் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 30, 2025 அன்று ஒரு முக்கிய உத்தரவை இலங்கை வக்பு சபை பிறப்பித்துள்ளது.
-

கல்எலியவில் அமைந்துள்ள 65 ஆண்டு பழைமையான முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் ((MLAC) நிர்வாகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவருமுகமாக, கல்லூரியின் நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விவாதங்களைத் தொடர்ந்து அக்கல்லூரி இனி வக்ப் சட்டத்தின் விதிகளின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும் என வக்பு சபை உத்தரவிட்டுள்ளது.
வக்ப் சபை என்றால் என்ன?
இலங்கை வக்பு சபையானது பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட (திருத்தங்களுக்கு அமைய) 1956 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க வக்ப் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வ அமைப்பாகும் என்பதை பலரும் அறிவர். மேற்படி சட்டத்தின் பிரிவு 32 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக உருவாக்கப்படும் முஸ்லிம் மதத் தலங்கள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகளை (வக்ப்கள்) பதிவு செய்வதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் ஒரு சட்ட கட்டமைப்பை இது வழங்குகிறது.
வக்ப் நடைமுறை என்பது இஸ்லாமிய பொதுநல அமைப்புக்களில் இருக்க வேண்டிய ஒரு முக்கிய நியதியாகும், அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி ஒரு முஸ்லிம் பொது நலனுக்காக பணம், நிலம், கட்டிடம் அல்லது வருமானம் போன்றவற்றை பிற்காலத்தில் எவராலும் மாற்ற முடியாத விதத்தில் அர்ப்பணிப்புச் செய்வதை வக்பு செய்தல் எனப்படும். இதன் முக்கிய அம்சங்களாவன:
நிரந்தர அர்ப்பணிப்பு: ஒரு சொத்து வக்ப் என்று அறிவிக்கப்பட்டதன் பின் அதனை விற்கவோ அல்லது அதன் வாரிசுகளுக்கு உரிமை மாற்றவோ முடியாது. அது வக்பு செய்யப்பட்டவுடன் அதன் தொண்டு நோக்கங்களுடன் நிரந்தரமாக பிணைக்கப்பட்டு விடும்.
முஸ்லிம் பொதுமக்களுக்கான நன்மை: வக்புகளின் முதன்மை குறிக்கோள் மஸ்ஜிதுகளை, முஸ்லிம் பாடசாலைகளை அமைப்பது, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சாலைகள் அமைப்பது, தண்ணீர் வசதிகள் செய்துகொடுப்பது போன்றவை மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு சேவை செய்வதாகும். ஆனால் ஏனைய சமூத்தினருக்கும் வக்பு சொத்துக்கள் மூலம் உதவிகள் செய்ய அனுமதி உண்டு.
Bu hikaye Vidivelli Weekly dergisinin May 15, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Vidivelli Weekly'den DAHA FAZLA HİKAYE
Vidivelli Weekly
மர்ஹும் அஷ்ரபின் ஒலுவில் வீடுமற்றும் காணி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1 mins
May 22, 2025
Vidivelli Weekly
இலங்கை-பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும செயலாளராக முஜிபுர் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவியும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1 min
May 22, 2025
Vidivelli Weekly
மன்னார்-புத்தளம் வீதியை மூட நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானதே
வன்மையாக கண்டிக்கிறோம் என பாராளுமன்றில் ரிஷாத் தெரிவிப்பு
1 mins
May 22, 2025
Vidivelli Weekly
ஊவாவின் இளம் கல்வியியல் பேராசிரியர் ஜே.டி. கரீம்டீன்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஜே.டி. கரீம்டீன், பேராசிரியராக பதவியுர்த்தப்பட்டுள்ளார். இதற்கான அனுமதி திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் சபையினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் கல்வித் துறையில் பணியாற்றுகின்ற இளம் பேராசிரியர்களில் ஒருவராக இவர் திகழ்கின்றார்.
1 mins
May 22, 2025
Vidivelli Weekly
அவள் கதை" மிஸ் கோலால் ஏற்பட்ட தொடர்பு மத்ஹபை மாற்றிய விவாக பதிவாளர்
இருள் சூழத்தொடங்கிய மாலை வேளையில் ஒரு பெண்ணின் குரல்...சேர்... திரும்பிப் பார்க்கிறேன்.
2 mins
May 22, 2025
Vidivelli Weekly
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின வைபவம்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு 7 ஜே.ஆர். ஜெயவர்தன நிலையத்தில் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
1 min
May 22, 2025
Vidivelli Weekly
உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்ற தொடரும் அரசியல் போராட்டம்!
இலங்கையிலுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கடந்த மே 6 ஆம் திகதி முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை யார் பெறப்போகின்றனர் என்ற தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது
4 mins
May 22, 2025
Vidivelli Weekly
பலஸ்தீனத்தை ஆதரிக்கவும், காஸா மனிதாபிமான பேரழிவை கண்டிக்கவும் ஒன்றிணைந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும்
காஸாவில் நிகழும் மனிதாபிமான பேரழிவினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், போர்நிறுத்தம் மற்றும் முற்றுகையை நீக்கவும் அழைப்பு விடுப்பதற்காக இலங்கையின் அனைத்து அரசியல் தலைவர்களும் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடினர்.
3 mins
May 22, 2025
Vidivelli Weekly
மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் ஐந்தாம் வருட நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை பேராதனை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை, அறபு மொழித் துறையின் முன்னாள் தலைவரும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முன்னாள் பணிப்பாளரும், கல்விமானுமான மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் ஐந்தாவது வருட நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 6.30 மணிக்கு கொழும்பு, மருதானை தெமடகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
1 min
May 22, 2025
Vidivelli Weekly
'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' செவ்வாயன்று நூல் வெளியீட்டு விழா
இலங்கையில் நடைபெற்ற திகிலூட்டும் உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.கே.எம். அஸ்வர் எழுதிய 'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாயன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
1 min
May 22, 2025
Translate
Change font size