The Perfect Holiday Gift Gift Now

கூட்டம் : குழப்பம் : மரணம்

Dinamani Coimbatore

|

June 30, 2025

நாம் என்ற எண்ணம் இல்லாமல் தான், தனது என்று எண்ணி விட்டில் பூச்சி தீயில் விழுந்து மரணிப்பதுபோல தன்னுடைய அவசரக்குடுக்கைதனத்தால் கூட்டத்தில் சிக்கி வாழ்க்கையை சிலர் இழக்கிறார்கள். இதற்கு நிர்வாகக் கோளாறும், ஆட்சி செய்வோரின் அலட்சியமும், காவலர்களின் திறமையின்மையும் காரணங்கள்.

- டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா

ஒருவர் விபத்தில் மரணிக்கலாம், கொலையுண்டு மரணிக்கலாம், விஷ ஜந்துக்கள் தீண்டி மரணிக்கலாம்-இவ்வாறு காரணங்கள் மாறுபட்டாலும் மரணம் என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத உண்மை. ஆனால், ஒரு கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கீழே தள்ளப்பட்டு, சிக்குண்டு, மிதிபட்டு, அடிபட்டு, மூச்சுத்திணறி மரணிப்பது எவ்வளவு கொடுமை.

மனிதனை எருமை மாட்டால் மிதிக்கவிட்டு கொல்வதை கருட புராணத்தில் இருந்து எடுத்து 'அந்நியன்' படத்தின் இயக்குநர் சங்கர் 'அண்டகூபம்' என்று விளக்குகிறார். நம்மை ஒருவர் இடித்தோ, மிதித்தோ செல்லும்போது எருமை மாடு என்று நாம் திட்டும் பழக்கம் கருட புராணத்தின் நீட்சிதானோ என்னவோ...

'கோழி மிதித்து குஞ்சு சாகாது' என்ற பழமொழி கூட்டத்தில் மிதிபட்டு சாகும் மனிதனுக்குப் பொருந்தாது!

இதுபோன்ற மரணங்களின் இடங்கள் மாறுபட்டாலும், அவற்றுக்கான அடிப்படை காரணங்கள் ஒன்றே ஒன்றுதான். இதுபோன்ற நிகழ்வுகள் உலகம் முழுவதும் காலம்காலமாய் கேளிக்கை இடங்களில் மட்டுமல்ல, பொது இடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பணக்கார இஸ்லாமிய பெரியவர் திண்டுகல்லில் பக்ரீத்தின்போது ஏழைகளுக்கு உணவும், உடையும் வழங்க முற்பட்டார். அங்கு கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி சில ஆண்களும், பெண்களும் இறந்தனர். நல்லது செய்ய நினைத்து சோகத்தில் முடிந்த அந்த நிகழ்வு குறித்து அந்தப் பெரியவர் கண்ணீர் பேட்டி அளித்தார்.

கடந்த 1990-இல் மெக்கா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 1,426 பேர் உயிரிழந்தனர். 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி ஹஜ் பயணத்தின்போது மதினா கூட்ட நெரிசலில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.

இதுபோன்ற நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள் ஹிந்து மத புனிதத் தலங்களிலும் தொடர்கின்றன. இதில் இருந்து யாரும் பாடம் படித்ததாகத் தெரியவில்லை. 30.9.2008-இல் நவராத்திரிமுதல் நாள் அன்று ஜோத்பூர் சாமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசலில் 224 பேர் உயிரிழந்தனர்; 475 பேர் காயமடைந்தனர்.

Dinamani Coimbatore'den DAHA FAZLA HİKAYE

Dinamani Coimbatore

யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

வருடச் சிவந்த மலரடிகள்

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

time to read

2 mins

January 04, 2026

Dinamani Coimbatore

அறநிலையத் துறையில் ரூ.124 கோடியில் புதிய பணிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

1 mins

January 04, 2026

Dinamani Coimbatore

வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்

பிசிசிஐ உத்தரவு எதிரொலி

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Coimbatore

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Coimbatore

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size