Denemek ALTIN - Özgür
'மோந்தா' புயல் அக். 28-இல் கரையைக் கடக்கும்
Dinamani Chennai
|October 26, 2025
வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு
-
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் அக். 28-ஆம் தேதி தீவிர புயலாக (மோந்தா) வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
சனிக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி போர்ட் பிளேரில் இருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே 510 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 920 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 920 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கே 1000 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இந்தப் புயல் சின்னம் மேற்குவடமேற்கு திசையில் நகர்ந்து அக். 26-இல் தாழ்வு மண்டலமாகவும், அக். 27-இல் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் ‘மோந்தா’ புயலாகவும் வலுவடையும்.
இந்த மோந்தா புயல், வடக்குவடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக். 28-இல் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம்–கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும். இதனால் தமிழகம் முழுவதும் பெரிய அளவு மழை பாதிப்பு இருக்காது. எனினும், புயலின் வேக மாறுபாடு காரணமாக கரையைக் கடக்கும்போது, வட தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 26) முதல் அக். 31-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 26, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
இந்தியாவில் 'கிம்ப்டன்' சொகுசு விடுதி
அதானி-ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் ஒப்பந்தம்
1 min
May 15, 2026
Dinamani Chennai
சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
மீண்டெழுமா மேற்கு வங்கம்?
மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.
2 mins
May 15, 2026
Dinamani Chennai
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்
இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
May 15, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Chennai
விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு
மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
முதல்வர் விஜய் உத்தரவு
1 min
May 15, 2026
Dinamani Chennai
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Chennai
ஆசிய பளுதூக்குதல்: அஜித்துக்கு வெண்கலம்
ஆசியபளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜித் நாராயணா இரு வெண்கலப் பதக்கங்களை வியாழக்கிழமை வென்றார்.
1 min
May 15, 2026
Listen
Translate
Change font size
