Facebook Pixel 'இண்டி' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி | Dinamani Chennai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

'இண்டி' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி

Dinamani Chennai

|

August 20, 2025

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

'இண்டி' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணியின் பொது வேட்பாளராக, தெலங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டார். எதிர்வரும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 'சித்தாந்தப் போர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார்.

இப்போது எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளரை அறிவித்திருப்பது, தேர்தலில் போட்டிக்கு வழிவகுத்துள்ளது. தங்களின் முடிவு தொடர்பாக, செய்தியாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, கூட்டறிக்கையை வாசித்து கார்கே கூறியதாவது: எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டுமென்ற முடிவு ஒருமனதாக மேற்கொள்ளப்பட்டதாகும். பொது வேட்பாளர் தேர்வில், அனைத்து எதிர்க்கட்சிகளும் கருத்தொற்றுமையை வெளிப்படுத்தின. இது, ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் தாக்குதலுக்கு இலக்காகும் போதெல்லாம், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபடுகின்றன. தற்போதைய சித்தாந்தப் போரில் (குடியரசு துணைத் தலைவர் தேர்தல்) எங்களின் பொது வேட்பாளராக பி.சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்துள்ளோம்.

இவர், நாட்டின் புகழ்பெற்ற முற்போக்கான நீதிபதிகளில் ஒருவர். ஆந்திர உயர்நீதிமன்றம், குவஹாட்டி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி என நீண்ட கால சட்ட அனுபவம் கொண்டவர். சமூக-பொருளாதார-அரசியல் நீதியின் நிலையான மற்றும் துணிச்சல்மிக்க பாதுகாவலனாக செயல்படுபவர். ஏழைகளின் ஆதரவாளர். தனது பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக ஏழைகள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

எங்கே கொண்டு போகிறாய் காலமே?

அண்மையில் மறைந்த பிரபல திரையுலகப் பிரமுகரின் உடலைச் சுமந்து வந்த வண்டியிலிருந்து அவ்வுடலை இறக்கிட இயலாதபடி நூற்றுக்கணக்கான கேமரா கருவிகள் முற்றுகையிட்டன.

time to read

3 mins

July 01, 2026

Dinamani Chennai

தவெக தலைமையில் புதிய கூட்டணி?

தவெக சார்பில் தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் புதன்கிழமை (ஜூலை 1) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

விழிஞ்ஞம் துறைமுகத்தின் 49% பங்குகளை வாங்கும் உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனம் 'எம்எஸ்சி'

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான எம்எஸ்சி, கேரளத்தில் உள்ள அதானி குழுமத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் 49 சதவீத பங்குகளை சுமார் 140 கோடி டாலருக்கு வாங்குகிறது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடி

நடப்பு 2026-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

வடதமிழகத்தில் இரு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமை (ஜூலை 1, 2) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

தென்மேற்குப் பருவமழை தாமதம்: காரீஃப் பருவ விதைப்பு 23% குறைந்தது

தென்மேற்குப் பருவமழை தாமதமானதால் நாடு முழுவதும் நெல் உள்ளிட்ட காரீஃப் பருவ விதைப்பு 23 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

தொடர்ந்து 9-ஆவது காலாண்டாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை பெற தகுதியுள்ளது என அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

போதை எனும் உபாதை!

போ தைப் பொருள் தடுப்பு முகமையின் 2026-ஆம் ஆண்டு அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வெளியிட்டார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Chennai

ஆராய்ச்சிக்காக பறக்கவிடப்பட்ட பாறு கழுகு உதகை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை அருகே எப்பநாடு வனப் பகுதியில் ஆராய்ச்சிக்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தி அனுப்பப்பட்ட வெண்முதுகு பாறு கழுகு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதுகுறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Translate

Share

-
+

Change font size