Denemek ALTIN - Özgür
தமிழக ஆளுநரின் செயல் சட்டத்துக்கு எதிரானது
Dinamani Chennai
|April 09, 2025
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்திவைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
-
புது தில்லி, ஏப். 8:
மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்களை நிறைவேற்றாமல் தாமதப்படுத்த ஆளுநருக்கு வீட்டோ (தனி) அதிகாரம் என ஏதுமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அசாதாரணமானதாகக் கருதப்படும் இந்தத் தீர்ப்பு மூலம், இனி பேரவை அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? அவர்கள் எத்தனை நாள்களுக்குள் மசோதா மீது முடிவெடுக்க வேண்டும்? என காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமன அதிகாரம், பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2023, நவம்பரில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த சில மாதங்களாக விரிவாக விசாரித்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி. வில்சன் ஆகியோரும், ஆளுநர் மற்றும் மத்திய அரசின் சார்பில் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) ஆர். வெங்கடரமணியும் ஆஜராகினர்.
கடைசியாக கடந்த பிப். 11-ஆம் தேதி இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, தமிழக அரசுக்கும் ஆளுநர் தரப்புக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது.
மூன்று வாய்ப்புகள்: இந்நிலையில், மூத்த நீதிபதி ஜே.பி. பார்திவாலா எழுதியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
Bu hikaye Dinamani Chennai dergisinin April 09, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டுடன் 'டிரா' செய்தார்.
1 min
May 19, 2026
Dinamani Chennai
பயன்பாட்டுக்கு வந்தது | எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன வாகன நிறுத்தும் மையம்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
எடையைக் குறைக்க உகந்தது கோடை
இயற்கை மருத்துவர்கள்
1 min
May 19, 2026
Dinamani Chennai
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Chennai
பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது
எஸ்.பி.வேலுமணி தரப்பு
1 min
May 19, 2026
Dinamani Chennai
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை
தேர்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
1 min
May 19, 2026
Dinamani Chennai
முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்: முதல்வர்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 19, 2026
Translate
Change font size

