Denemek ALTIN - Özgür
அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல் அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை
Dinamani Chennai
|November 23, 2024
மாஸ்கோ, நவ. 22: தங்கள் ஆயுதங்கள் மூலம் ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க, பிரிட்டன் ராணுவ நிலைகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
உக்ரைனில் கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) ஏவுகணையை ரஷியா புதன்கிழமை நள்ளிரவு வீசியதாக அந்த நாடு குற்றஞ்சாட்டிய நிலையில், அது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, ஒலியைப்போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய 'ஒரேஷ்னிக்' என்ற ஏவுகணை என்பதை புதின் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியதாவது: உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மேற்கத்திய நாடுகளால் தூண்டப்பட்டது. தற்போது தாங்கள் தயாரித்த நீண்ட தொலைவு ஏவுகணைகள் மூலம் ரஷியா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அவை அனுமதி வழங்கியுள்ளன. அத்தகைய ஏவுகணைகளைத் தயாரித்த நாடுகளின் நேரடி பங்களிப்பில்லாமல் அவற்றை ரஷியா மீது வீச முடியாது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
இந்தச் சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) அமெரிக்காவின் அட்டாக்கம்ஸ் ஏவுகணைகள் ரஷியா மீது வீசப்பட்டன. தொடர்ந்து வியாழக்கிழமை (நவ.21) பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஸ்டார்ம் ஷேடோ, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிம்ராஸ் ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, வெறும் பிராந்திய சண்டையாக இருந்த உக்ரைன் போர், உலகளாவிய போராக உருவெடுத்துள்ளது.
இதில் அட்டாக்கம்ஸ் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதால் எந்த பெரிய பாதிப்பும் இல்லை. ஆனால், கூர்ஸ்க் பிராந்தியத்திலுள்ள ராணுவ கட்டளையகத்தைக் குறிவைத்து வீசப்பட்ட ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணையால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இருந்தாலும், அந்த கட்டளையகத்தின் அதிகாரிகள், வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அது, கூர்ஸ்க் பிராந்தியத்துக்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் படையினரை விரட்டியடிப்பதற்கான பணியை தங்குதடையின்றி தொடர்ந்து மேற்கொள்ளும்.
மேற்கத்திய ஏவுகணைகளை ரஷியா மீது வீசுவதால் உக்ரைன் போரின் போக்கை மாற்றிவிட முடியாது. ரஷிய ராணுவம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. எங்களது இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கைகளின் இலக்குகளை அடைந்தே தீருவோம்.
Bu hikaye Dinamani Chennai dergisinin November 23, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை
புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Translate
Change font size

