Denemek ALTIN - Özgür
நேபாளத்தில் நிலநடுக்கம்: 157 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai
|November 05, 2023
நேபாள நாட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவு கோலில் 6.4 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் மலைப் பகுதியில் அமைந்திருந்த வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 157 போ் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
நிலடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளில் மேலும் பலா் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
நேபாள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய தகவலின்படி, காத்மாண்டுக்கு மேற்கே 500 கி.மீ. தொலைவில் ஜாஜா்கோட் மாவட்டத்தை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தின் மேற்குப் பகுதிகளான ஜாஜா்கோட் மற்றும் ருக்கும் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வெளியாகும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்துள்ளன. ஏராளமான கட்டடங்களும், வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
இந்த இரு மாவட்டங்களிலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 157 போ் வரை உயிரிழந்திருப்பதாக நேபாள பிரதமா் புஷ்பகமல் தாஹாலின் செயலகம் தெரிவித்துள்ளது. 160 போ் காயமடைந்திருப்பதாகவும், மக்கள் தூக்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால், இடிபாடுகளில் மேலும் அதிகமானோா் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
Bu hikaye Dinamani Chennai dergisinin November 05, 2023 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி
சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.
1 mins
May 17, 2026
Dinamani Chennai
பயோபிக் லைன் அப்!
மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் படமாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஆளுமைகள் சிலரின் பயோபிக் பட வேலைகள் மும்முரம் அடைந்துள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு ..
2 mins
May 17, 2026
Dinamani Chennai
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞர் நியமனம்
குற்றவியல் வழக்குகளில் தமிழக அரசு சார்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞர் ஜான் சத்யனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
சாமான்யர்களின் வலியை நீதித் துறை தீர்க்க வேண்டும்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
1 min
May 17, 2026
Dinamani Chennai
மெட்ரோ ரயில்களில் பொருள்கள் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு
மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது, பொருள்கள் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் வகையிலான சாதனம் சர்வதேச அளவில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பர்கர் சாப்பிட்டபோது உணவுக் குழாயில் சிக்கிய உலோகக் கம்பி மோரிஸஸ் ஆசிரியைக்கு சென்னையில் உயிர்காக்கும் சிகிச்சை
மோரீஷஸ் நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையின் முக்கிய ரத்த நாளம் மற்றும் தமனி இடையே சிக்கியிருந்த உலோகக் கம்பியை சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் நுட்பமாக அகற்றி உயிர் காத்துள்ளனர்.
1 mins
May 17, 2026
Dinamani Chennai
குறைந்த கால ஹஜ் யாத்திரைத் திட்டம்: மத்திய அரசு தொடங்கியது
இந்திய யாத்ரிகர்களுக்கு குறைந்த கால ஹஜ் யாத்திரைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
சிண்டாரோவை சாய்த்தார் பிரக்ஞானந்தா
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றார்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
May 17, 2026
Translate
Change font size
