Denemek ALTIN - Özgür
சென்னை IITயில் சேருகிறார் - அரசு பழங்குடியினர் பள்ளி மாணவி!
Kungumam
|20-06-2025
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக ஜொலிக்கிறார் ராஜேஸ்வரி. அரசு பழங்குடியினர் உண்டு உறை விடப் பள்ளியில் படித்து சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ள முதல் மாணவி இவர்.
ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு ஜேஇஇ மெயின்ஸ் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடக்கும் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.
முதல்கட்டமான ஜேஇஇ மெயின்ஸை கிளியர் செய்தால்தான் இரண்டு கட்டமான அட்வான்ஸ்டுக்குத் தகுதி பெறமுடியும். இவை இரண்டிலும் தேர்ச்சி பெறுவது அவ்வளவு சுலபமானதும் அல்ல. ஜேஇஇ மெயின்ஸை கிளியர் செய்யும் சிலர், அட்வான்ஸ்டு தேர்வில் தோல்வியடைவதும் உண்டு.
ஆனால், இவை இரண்டையும் கிளியர் செய்து வெற்றி வாகை சூடியிருக்கிறார் ராஜேஸ்வரி. அதுமட்டுமல்ல. இதற்கு என்சிஇஆர்டி வெளியிடும் பாடப்புத்தகங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். இதனாலேயே பலரும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்காகத் தனியாக கோச்சிங் செல்வார்கள்.
இதில் ராஜேஸ்வரியோ தமிழக அரசின் பழங்குடி நலத்துறையினர் வழங்கிய ஆன்லைன் பயிற்சி வகுப்பின் மூலமே படித்து வெற்றியை தன்வசமாக்கி இருக்கிறார்.
இதற்கிடையே அவரின் தந்தை புற்றுநோயால் இறந்து விட அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வந்து இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
இதனால்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில், 'தந்தையை இழந்தாலும் அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் ராஜேஸ்வரியின் சாதனைக்கு சல்யூட்' எனக் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார். அத்துடன் அவரின் உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் தமிழக அரசே ஏற்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
தற்போது செங்கல்பட்டு மாவட்டம் குமிழி கிராமத்தில் உள்ள அரசு பழங்குடி நலத்துறையினரின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை எடுத்து வருகிறார் ராஜேஸ்வரி. அவரிடம் பேசினோம்.
"ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு ஆசிரியர்களும், என் குடும்பத்தினரும் தந்த ஊக்கமே காரணம். ஆசிரியர்கள் வழங்கிய பயிற்சியும் வழிகாட்டுதல்களும் சிறப்பானவை..." என அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் ராஜேஸ்வரி.Bu hikaye Kungumam dergisinin 20-06-2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Kungumam'den DAHA FAZLA HİKAYE
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
