Facebook Pixel எனக்கு நானே நண்பன், நானே பகைவன்! | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!

Aanmigam Palan

|

July 16-31, 2025

நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை 'வேண்டாம்' என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!

அல்லது கொடுப்பவர் மனம் வருந்தக் கூடாதே என்பதற்காக வாங்கி வைத்துக்கொண்டு, மூலையில் தூக்கிப் போடுவது அல்லது ஓரிரு நாட்கள் கழித்துக் குப்பையில் சேர்ப்பது என்று செய்தால் அது கொடுத்தவருக்கும், அந்தப் பொருளுக்கும் நாம் செய்யும் அவமரியாதைதானே! ஆகவே 'வேண்டாம்' என்று மறுப்பதற்குக் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். அதாவது அந்தப் பொருள் மீது இச்சையே எழாதபடி பார்த்துக் கொள்ளலாம்.

“உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவ ஸாதயேத் ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன” (6:5)

''உன்னை நீயே உயர்த்திக் கொள். நீயாக ஏன் உன்னை இழிவு படுத்திக் கொள்கிறாய்? உன் நிலையின் இருப்பு உன்னிடமே இருக்கிறது. ஆமாம், நீயே உனக்கு நண்பன், நீயே உனக்குப் பகைவன்." யாசகம் கோருவது இழிவு. நமக்கு அளிக்கப்படுவதை மறுப்பது உயர்வு. நமக்கு அளிக்கப்படுவது இல்லாமல் நம்மால் வாழ்க்கையை நிம்மதியாக, மகிழ்ச்சியாக நடத்திச் செல்லமுடியும்தான். ஆகவே 'வேண்டாம்' என்பது உயர்வுதான். இதில் இன்னொரு பரோபகாரமும் இருக்கிறது. அதாவது, தனக்கு வேண்டாதது, அது அவசியமாகத் தேவைப்படும் இன்னொருவருக்கு அளிக்கப்படலாம் இல்லையா? ஆங்கிலேயரிடமிருந்து நம் பாரதத்தை மீட்க எத்தனையோ லட்சக்கணக்கான போராளிகள் தம் உடைமை, உயிர் எல்லாவற்றையும் தியாகம் செய்தார்கள்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னாலேயே அதற்காகப் பாடுபட்டவர்களில் பலர் அதைக் காண முடியாமலேயே சிறைக் கொடுமையாலும், அதனால் ஏற்பட்ட உடல் நலச் சிதைவாலும் அல்லது தண்டனையாகத் தூக்கிலிடப்பட்டும் உயிர் நீத்து விட்டார்கள்.

ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகும் உயிர் வாழ்ந்தவர்களில் பலர், தங்களுடைய தியாகங்களுக்கு அங்கீகாரமாகக் கொடுக்கப்பட்ட அரசாங்கச் சலுகைகளை 'வேண்டாம்' என்று சொல்லி மறுத்து விட்டார்கள். 'சுதந்திரம் என்ற நாட்டுப் பலனைத் தவிர சுய ஆதாயம் எதற்காகவும் நாங்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடவில்லை,' என்று கம்பீரமாக சொல்லி நிமிர்ந்து. நின்றார்கள். இத்தகைய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார்.

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size