Try GOLD - Free
மத்வரின் இளைய சகோதரர்!
Aanmigam Palan
|July 16-31, 2025
மகத்துவம் மிக்க மத்வ மஹான்கள் பகுதியில், முதலில் துவைத தத்துவத்தை ஸ்தாபித்த ஸ்ரீமத் மத்வாச்சாரியார் அவர்களில் இருந்து தொடங்கி, ஸ்ரீ பத்மநாபதீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவதீர்த்தர், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், ஸ்ரீ ஜெயதீர்த்தர், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர், ஸ்ரீ கவிந்திர தீர்த்தர், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் ஆகிய மகான்களை வரிசைப்படி தரிசித்து வந்தோம்.
-
இதுவரை மத்வரையும் சேர்த்து ஒன்பது மகான்களை தரிசித்துள்ளோம். இனி நாம் வரிசையாகவோ அல்லது மடங்களின் வரிசைப்படியோ நாம் காண இயலாது. காரணம், ஒவ்வொரு மடத்திற்கும் இதுவரை பல மஹான்கள் பீடத்தை அலங்கரித்துவிட்டனர். ஆகையால், மடத்தின் வரிசைப்படி சென்றால், ஒரு மடம் நிறைவு பெற பல மாதங்கள் வரை எடுக்கும். ஆகையால் இனி ரேண்டமாக (Random) மகான்களின் ப்ருந்தாவனத்தை தரிசிப்போம்!
முதல் மகான்
இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கும் மகான் “ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர்”. இவர் ஸ்ரீ குக்கே சுப்ரமண்யா மடத்தைச் சார்ந்த மகான். அதுவும், இந்த மடத்தின் முதல் மகானும் ஆவார். மேலும் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், மத்வாச்சாரியாரின் பூர்வாஷ்ரம இளைய சகோதரர்தான் ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர். இந்த மடத்திற்கு தனியாக குக்கே சுப்ரமண்யா கோயிலே உள்ளது. இந்த கோயிலில் சுப்ரமண்யா என்று சொல்லக்கூடிய முருகன் அருள் செய்கிறார். விஷ்ணுதீர்த்தரை தரிசிப்பதற்கு முன்பாக, அறிய பொக்கிஷமாய் திகழும் “சம்புட நரசிம்மரை” பற்றியும், “ஸ்ரீ குக்கே சுப்ரமண்யா” மடத்தையும், கோயிலையும் பற்றி சற்று தெரிந்து கொள்வோமா?
அதிசய சம்புட நரசிம்மர்
ஸ்ரீ மத்வாச்சாரியார், பத்ரிகாஸ்ரமம் சென்று பத்ரிநாதரை தரிசித்த போது, மத்வருக்கு ஸ்ரீ வேதவியாச தேவர், “வியாச முஷ்டி” என்று சொல்லப்படும் எட்டு சாளக்கிராமத்தை வழங்கினார். இதில் ஆறு சாளக்கிராமங்கள் தற்போது வரை குக்கே சுப்ரமண்யா மடத்தில் பூஜிக்கப்பட்டு வருகிறது என்பது, இந்த மடத்திற்கும் கோயிலுக்கும் மாபெரும் பெருமை. மேலும், வியாஸமுஷ்டிகளுடன் சேர்த்து, மத்வாச்சாரியாருக்கு ஒரு நரசிம்ம சாளக்கிராமத்தையும் வழங்கினார் வேதவியாசர்.
This story is from the July 16-31, 2025 edition of Aanmigam Palan.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size
