Facebook Pixel பீஷ்மாச்சாரியாரும் விஷ்ணு ஸகஸ்ரநாமமும் | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com

Try GOLD - Free

பீஷ்மாச்சாரியாரும் விஷ்ணு ஸகஸ்ரநாமமும்

Aanmigam Palan

|

January 16, 2024

நம்முடைய பாரத நாட்டில் பல பலச் சமயங்கள் இருக்கின்றன. பல விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.

பீஷ்மாச்சாரியாரும் விஷ்ணு ஸகஸ்ரநாமமும்

ஆனால் இத்தனை வழிபாட்டு முறைகளுக்கும் அடிப்படையாக வேதம் இருக்கிறது. வேதத்தை வேதவியாசர் நான்கு வேதங்களா கத் தொகுத்துக் கொடுத்தார் என்பது நமக் குத் தெரியும். வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, நம்முடைய வாழும் முறையும் வழிபாட்டு முறையும் அமைந்திருக்கிறது. நான்கு வேதங்களையும் இறைவனின் மூச் சுக் காற்றாக நாம் கொள்கின்றோம். வேதம் வேறு; இறைவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். வேதம், இறைவனைக் காட் டித் தருகிறது. இறைவன் வேதத்தை நமக்கு காட்டித்தந்தான். "பரம கருணையினால் வேதத்தை அருளிச் செய்தான்" என்று ஆசாரிய ஹ்ருதயசூத்ரக்காரர் சொல்லுகின் றார். வேதம், எல்லோருக்கும் விளங்காது. 

அதற்காக இதிகாச புராணங்கள் படைக் கப்பட்டன. இதிகாசங்கள் இரண்டு. ஒன்று ராமாயணம். இன்னொன்று மகாபாரதம். மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று போற்றப்படுகிறது. மஹாபாரதத்தில் எத்த னையோ சிறப்பான விஷயங்கள் இருந்தா லும் மிக முக்கியமான இரண்டு சிறப்புக் களை குறிப்பிட வேண்டும்.

1.பகவத்கீதை.

2.விஷ்ணு சகஸ்ரநாமம்.

பகவத் கீதை என்பது சகல உபநிடதங்க ளின் சாரமாக, பகவான் கிருஷ்ணரால் அர்ஜூனனுக்குச் சொல்லப்பட்டது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது பகவா னான கண்ணனை, எதிரே அமரவைத்து, தர்மபுத்திரனை ஒரு காரணமாகக் கொண்டு பீஷ்மாச்சாரியார் சொன்னது. அப்படிச் சொல்லும் போது பல ரிஷிகள் இருந்தனர். வேதத்தைத் தொகுத்துக் கொடுத்த வியாச மகரிஷியும் அருகில் அமர்ந்திருந்தார். ஸகஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ர நாமத்தைத் தான் குறிக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் எப்படி அவதரித்தது என்கிற பின்னணியைப் பார்க்கவேண்டும்.

குருசேத்திர யுத்தம் முடிவு பெற்றது. கௌரவர்கள் அனைவரும் அழிந்து போயி னர். பாண்டவர்கள் பக்கலிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது. பஞ்ச பாண்டவர்களும் மற்றும் ஒரு சிலரும் மட்டும் இருந்தனர்.

தர்மபுத்திரன் மிகவும் கவலை அடைந்தான். போரில் வெற்றி பெற்ற பின்பும் அவனுக்கு நிம்மதி இல்லை. தவித்தான். கண்ணனிடம் போனான்.

"போரில் வெற்றி பெற்றும் எனக்கு எந்த நிம்மதியும் இல்லை. எனவே என் மனக் கவ லைக்கு ஒரு மருந்து சொல். நான் உன்னையே நம்பி இருக்கிறேன். என்னுடைய கவலை தீர ஏதாவது ஒரு வழியைச் சொல்” என்று கண்ணனிடம் வேண்டினான்.

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Listen

Translate

Share

-
+

Change font size