Facebook Pixel இலிங்க புராண தேவர் | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com

Try GOLD - Free

இலிங்க புராண தேவர்

Aanmigam Palan

|

May 16, 2023

ஒருமுறை பிரம்மனும், திருமாலும் பெரும் அகந்தையுற்றனர். படைத்தல், காத்தல் ஆகிய இரு தொழில்களுக்கும் தாங்களே காரணம் என்பதால் அவர்தம் ஆணவம் மேலோங்கியது. தங்களுக்குள் பெரியவன் யாவன் என்பதில் போட்டியிட்டனர். தங்கள் இருவரைக்காட்டிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா உயர்ந்தோன் ஒருவன் உளன் என்னும் எண்ணம் இருவருக்கும் எழவில்லை. நான்முகனும், மாலவனும் இது குறித்து வாதித்துத் தம்முட்கலகம் விளைவிக்கத் தொடங்கியதும், அவ்விருவர் நடுவே பேரொளிப் பிழம்பொன்று தோன்றியது. அதன் அடியும் முடியும் கண்ணுக்கு எட்டாதவாறு எல்லை கடந்து உயர்ந்து நின்றது. அதை ஆராயத் தொடங்கியவர்கள், அதன் அடிமுடி காணாதவர்களாய் திகைத்துத் தளர்வுற்றனர். இவை இரண்டிலொன்றைக் கண்டு முதலிற் திரும்புகின்றவரே மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவர் என முடிவு கொள்வோம் எனக் கூறிப் புறப்பட்டனர்

- குடவாயில் பாலசுப்ரமணியன்

இலிங்க புராண தேவர்

பிரம்மன் அன்னப்பறவையின் உருக்கொண்டு ஒளிப்பிழம்பின் உச்சியைத் தேடி உயரப் பறந்தான். மாலவனோ அடியினைக் காணும் அவாவுடன் பன்றி (ஏனம்) வடிவந்தாங்கி நிலத்தை அகழ்ந்துகொண்டே கீழே சென்றான். அடியும் முடியும் காணவொண்ணாதவாறு அவ்வனற்பிழம்பு விளங்குவதைக் கண்டு தேட ஆற்றலற்றவராய், செயலிழந்து திரும்பி வந்தனர்.

அவர்களின் ஆணவம் அவிந்து அடங்கியது. பரமேட்டி ஒளிப்பிழம்பாய்த் திகழ்ந்த நெடுந்தூணிலிருந்து (சோதி வடிவாய பெரும் இலிங்கத்திலிருந்து) தம் திருக்காட்சியைக் காட்டியருளினார். மாலவனும், நான்முகனும் கரம்கூப்பிப் போற்றினர். இந்நிகழ்ச்சியை இலிங்கபுராணம் விளக்கமுற உரைக்கின்றது.

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size