Facebook Pixel நம்பிக்கை சந்தேகங்களைத் தெளிவாக்கும்! | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நம்பிக்கை சந்தேகங்களைத் தெளிவாக்கும்!

Aanmigam Palan

|

February 16, 2023

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 43 (பகவத் கீதை உரை)

- பிரபு சங்கர்

நம்பிக்கை சந்தேகங்களைத் தெளிவாக்கும்!

தன் கருத்தை அனுசரிக்காதவர்களை களங்க புத்தி கொண்ட மூர்க்கர்கள் என்று வர்ணிக்கிறார் கிருஷ்ணன். அதாவது, தாம் செய்யும் எந்த கர்மாவிலும் ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்கள்! அவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபமானது. ஏமாற்றத்திலும், துன்பத்திலுமே உழலக்கூடியவர்கள் அவர்கள். வெளிறிய வானம் போல நிர்மலமாக இருக்க முடியாதவர்கள்! ஆகாயம் தன்னை மேகம் மூடினாலும் வருத்தப்படுவதில்லை; தன்னைவிட்டு விலகினாலும் சந்தோஷப்படுவதில்லை.  இந்த பவித்திரமான உணர்வை எதிர்பார்ப்பாளர்களால் அடைய முடிவதில்லை!எதிர்பார்ப்புகள் இல்லாதபோது ஏமாற்றமும் இருக்காது. எதிர்பார்த்து ஏங்கும் மனம், எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் அப்படியே உடைந்து போகிறது. எதிர்பார்க்காவிட்டால், கிடைக்காததை எண்ணி மனம் வருந்தவேண்டிய அவசியமில்லை. அற்ப ஏமாற்றங்களை, நஷ்டங்களைக்கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

எட்டு மணிக்கு ரயில் வரும் என்று எதிர்பார்த்துச் செல்லும் நாம், எட்டு என்பது எட்டரையாகி, ஒன்பதாகி, பத்தும் ஆகிவிட்டால் உடம்பில்தான் எத்தனை உஷ்ணம் ஏறுகிறது! குறிப்பிட்ட அந்த ரயிலில்தான் போகவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாகிவிட்டது. என்ன காரணத்தாலோ தாமதம். நியாயமான காரணம் இல்லாமல் ரயில் தாமதமாக வரவேண்டிய அவசியமே இல்லை என்பதும் தெரியும். அந்த சமயத்தில் மாற்று ஏற்பாடு எதுவும் செய்ய இயலாது.

என்ன செய்வது? காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் அந்தத் தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் வெகுண்டு, ரயில்வே அதிகாரிகளிடம் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். அப்போதைக்கு நம்மால் செய்ய முடிந்தது அதுதான். அதுவே ஒரு பேருந்து பழுது என்றால் உடனே மாற்று ஏற்பாட்டுக்கு வழி இருக்கிறது. பேருந்துக்குப் பல சாலை வழிகள் இருக்கின்றன. ஆனால் ரயில் அந்த ஒரு தடத்தில் மட்டும்தான் வரமுடியும். என்ன செய்வது? காத்திருப்பதைத் தவிர வேறு என்னதான் செய்வது? 

மனம் குமைவதும், கோபப்படுவதும், அந்தக் கோபத்தை வெளிக்காட்டுவதும், அல்லது அப்படி வெளிக்காட்டித் தன்னுடைய அத்தகைய ‘பராக்கிரமத்தை' விளம்பரப்படுத்திக் கொள்வதும், சம்பந்தமேயில்லாமல் உடன் வந்திருக்கக் கூடியவர்களிடமும் கோபத்தை வீசுவதும்தான் - எதிர்பார்த்ததன் பலன்கள்!

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size