Try GOLD - Free
சிவாக்னியை பெற்ற வாகீஸ்வரர் வாகீஸ்வரி
Aanmigam Palan
|December 01, 2022
சிவாகமங்கள் சிவாக்னிதேவரின் தாய், தந்தையரை வாகீஸ்வரர்-வாகீஸ்வரி என்று குறிக்கின்றன. மகேஸ்வரரான சிவபெருமானும், பார்வதியாகிய கௌரி தேவியுமே வாகீஸ்வரரும் வாகீஸ்வரியும் ஆவர். இவர்களைப் பூசித்து இவர்களிடமிருந்தே சிவாக்கினி உற்பத்தியாகி வேள்விக் குண்டத்தில் வளர்வதாக ஆகமங்கள் கூறுகின்றன.
கும்பாபிஷேகம் முதலிய பெருவிழாக் களில் அமைக்கப்படும் வேள்விச் சாலை யில் வாகீஸ்வரர்-வாகீஸ்வரிக்கு என தனியே இரண்டு பூரண கும்பங்கள் அமைத்து அவை சிறப்பாகப் பூசிக்கப்படுகின்றன. இவர்களுடைய திருவுருவத்தைக் குறிக்கும் தியான ஸ்லோகங் கள் பூஜாபத்ததி நூல்களில் உள்ளன.
இதன்படி வாகீஸ்வரருக்கு ஐந்து முகங்கள், முகந்தோறும் மூன்று கண்களாகப் பதினைந்து கண்கள். வெண்மையான நிறம்நான்கு கைகள் அவற்றில் அபயம், வரதம், அட்சமாலை தாமரை ஆகியவற்றை ஏந்தியவாறு தாமரைமலரில் வீற்றிருக்கின்றார். வாகீஸ்வரி, கரியநிறத்தை உடையவளாய், இளமையாக எழிலுடன் சந்திர னையும் பூமாலைகளையும் கூந்தலில் அணிந்து கொண்டு புஷ்பவதியாகக் காட்சியளிக்கின்றாள்.
தென்னகத்தில் பல்லவர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன்பே பரவியிருந்த லகுலீச பாசுபதர்கள் எனும் சைவப்பிரிவினர் சிவபெருமானைச் சதாசிவ மூர்த்தியாகத் தனிச் சிறப்புடன் போற்றினர். சதாசிவ மூர்த்தியின் வடிவ பேதங்க ளில் ஒன்றான வாகீஸ்வரரையும் வாகீஸ்வரியை யும் போற்றி அம்மூர்த் தங்களுக்குக் கோயில் அமைத்து வழிபாடு செய்தனர்.
அந்தச் சமயத்தின் குருமார்களைப் போற்றிய பல்லவ மன்னர்களும் அவர்களை தொடர்ந்து வந்த சோழப் பேரரசர்களும் வாகீஸ்வர வழிபாட் டைச் சிறப்புடன் ஏற்றுப் போற்றினர். இவர்கள் காலத்தில் வாகீஸ்வரருக்கெனத் தனிக்கோயில் கள் பல கட்டப்பட்டன. இவை வாகீஸ்வரமுடை யார் கோயில் என்றே அழைக்கப்பட்டன.
This story is from the December 01, 2022 edition of Aanmigam Palan.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size

