Facebook Pixel பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார்! | Malai Murasu - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார்!

Malai Murasu

|

November 20, 2025

2 துணை முதல்வர்கள், 24 அமைச்சர்களும் பதவியேற்றனர்; பிரதமர் மோடி, அமித்ஷா நேரில் வாழ்த்து!!

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார்!

பாட்னா காந்தி மைதானத்தில் பீகார் புதிய மந்திரிசபை பதவியேற்பு விழா இன்று முற்பகல் 11.30 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 10-ஆவது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

மேலும் 2 துணை முதல்வர்கள் மற்றும் 24 அமைச்சர்கள் பதவியேற்றனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அமித்ஷா, ஜெ. பி. நட்டா, தர்மேந்திர பிரதான் மற்றும் பா. ஜ. க. முதல்வர்கள் விழாவில் பங்கேற்று நிதிஷ் குமாருக்கும், துணை முதல்வர்களுக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

பீகார் சட்டசபைக்கு இம்மாதம் 6-ஆம் தேதி மற்றும் 11-ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மைக்கு 122 எம். எல். ஏ. க்கள் ஆதரவு தேவை. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

பா. ஜ. க. 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும், லோக்ஜன சக்தி (ராம் விலாஸ்) 19 தொகுதிகளிலும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மகாகட்பந்தன் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம் 25 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 1 இடத்திலும், இந்தியன் இங்குளுசிவ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஏ. ஐ. எம். ஐ. எம். 5 இடங்களிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் மொத்தம் 10 இடங்களில் வேட்டை!!

time to read

2 mins

May 27, 2026

Malai Murasu

Malai Murasu

தனி விமானத்தில் டெல்லி பயணம்: பிரதமருடன் முதல்வர் விஜய் இன்று மாலை சந்திப்பு!

அமித்ஷா, நிர்மலா சீதாராமனையும் சந்திக்கிறார்;|

time to read

1 mins

May 27, 2026

Malai Murasu

அ.தி.மு.க.அணிகள் இணைப்பு உறுதியானது!

\"இனி நமக்குள் பிரிவில்லை”, என கட்சி சார்பில் கருத்து!!

time to read

2 mins

May 27, 2026

Malai Murasu Chennai

பிரதமருடன் முதல்வர் விஜய்...

ரூபியோவும் வந்திருந்தார். இது போன்ற காரணங்களால் பிரதமருக்கு அலுவல்கள் அதிகம் இருந்தன.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

செந்தூர் விரைவு ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது! ஜூன் 15-ஆம் தேதி முதல் அமல்!!

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளது.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

தாம்பரத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் 300 வீரர்கள் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் (அன்னை அருள்) பள்ளியில் உலக சர்வதேச சதுரங்கப் போட்டி தமிழ்நாடு சதுரங்க சங்கம் மற்றும் ஆர்.வி. செஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வி.ஜி.பி. தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி வளாகத்தில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 196-ஆம் திருவள்ளுவர் சிலையினை, விஜிபி உலகத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்கள் திறந்து வைத்தார்.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க தமிழக விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி!

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார் !!

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

பள்ளிக் குழந்தைகளின் சீருடையை சீராக்குவோம்!

பல்வேறுசமூக, பொருளாதாரப்பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

time to read

1 mins

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புனித மக்காவில் இருந்து பிரசிடெண்ட் அபூபக்கர் 'பக்ரீத்' வாழ்த்துச் செய்தி!

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்காவில் இருந்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

time to read

1 min

May 27, 2026

Listen

Translate

Share

-
+

Change font size