Facebook Pixel இன்று சர்வதேச விண்வெளி... | Malai Murasu Salem - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

இன்று சர்வதேச விண்வெளி...

Malai Murasu Salem

|

June 26, 2025

சர்வதேச விண்வெளி மையத்திற்கு இது வரை 270 விண்வெளி ஆய்வாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் ஒரு இந்தியர் கூட அங்கே செல்லவில்லை. இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுபான்ஷு சுக்லா இந்தகவலையை நிவர்த்தி செய்யப் போகிறார்.

சோயுஸ் விண்கலத்தின் மூலமாக, சோவியத் யூனியனின் உதவியோடு ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்ணுக்குச் சென்றார். 1984ஆம் ஆண்டு இந்த பயணம் நிகழ்ந்தது. விண்ணுக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அவர். ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்தைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து சுக்லா விண்ணுக்குச் செல்கிறார்.

விண்ணுக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராக வும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியராகவும் அவர் இருப்பார். ஆக்ஸியம் 4 திட் டத்தின் கீழ், அமெரிக்காவின் ப்ளோரிடாவில் அமைந் துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத் தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுக்லா புறப்பட்டுள்ளார். விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் பயன் படுத்தப்பட்டு வந்தது. 2030-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

அதன் பிறகு ஆக்ஸியம் மையம் ஒன்று அங்கே உரு வாக்கப்படுகிறது. மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையமாக அது இருக்கும். அந்த மையத்தின் கட்டுமா னப் பணிகளுக்காக ஒவ்வொரு பொருட்களும் இங்கி ருந்து எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்படும். ஆக்ஸியம் விண்வெளி மையம் முழுமையாக கட்டப்பட்ட பிறகு இந்த உபகர ணங்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு ஆக்ஸியம் மையத் துடன் இணைக்கப்படும். பிறகு சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடு நிறுத்தப்படும்.

இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் ஆக்ஸி யம் 3 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சி யாக தற்போது ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து ஆராய்ச் சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். கடந்த 40 ஆண்டு களில் இந்த நாடுகளில் இருந்து யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ஆக்ஸியம் 4 திட்டத்தின் கமாண்டராக இருக்கும் பெக்கி விட்சனுக்கு இது ஐந்தாவது விண் வெளி பயணமாகும். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள் ளார். நூறு நாட்களுக்கும் மேலாக அங்கே இருந்த அவர் 10 முறை விண்வெளி நடை மேற்கொண்டிருக்கிறார்.

MORE STORIES FROM Malai Murasu Salem

Malai Murasu Salem

பெட்ரோல், டீசல் விலை...

எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் 20 சதவீத வர்த்தகம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Malai Murasu Salem

நீங்கள் அழைத்தால் பேச்சு வார்த்தைக்கு தயார்!

*எடப்பாடிக்கு, எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்; *‘வாங்க வாங்க’ என அழைத்தால் எல்லாமே மாறும் !!

time to read

1 min

May 15, 2026

Malai Murasu Salem

சட்டப் படிப்புகளுக்கான அரசு, தனியார் கல்லூரிகளுக்கு மே 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

ஜூன் 5-ஆம் தேதி கடைசி நாள் !!

time to read

1 min

May 15, 2026

Malai Murasu Salem

ஆட்டிசம் பாதிப்பை கட்டுப்படுத்துவோம்!

ஆட்டிசம் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததால், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளாகவே கருதும் மனநிலை நம் சமூகத்தில், குறிப்பாக கிராமப்புறங்களில் நிலவுகிறது.

time to read

1 mins

May 15, 2026

Malai Murasu Salem

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி: இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகக் கோரி நெருக்கடி!

தலைமை பதவிக்கு சவால்!!

time to read

1 mins

May 14, 2026

Malai Murasu Salem

சிவகார்த்திகேயன் வரிகளில் உருவான ‘வேலும் மயிலும்’!

தமிழ்த்திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என வலம்வரும் சிவகார்த்திகேயன் தற்போது தாய்க்கிழவி பட இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் தனது 26வது திரைப்படமான 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார்.

time to read

1 min

May 14, 2026

Malai Murasu Salem

ஐ.சி.எப்.பில் முதல் முறையாக தானியங்கி கதவுகளுடன் 'இழு' ரெயிலில் பெட்டிகள் தயாரிப்பு!

தானியங்கி கதவுகள் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் வசதிகளுடன் கூடிய புறநகர் மின்சார இமு வகை ரெயில், சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டிகள் நிறுவனத்தில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Malai Murasu Salem

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

time to read

1 min

May 14, 2026

Malai Murasu Salem

அ.தி.மு.க. உள்கட்சி மோதல் எதிரொலி: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு!!

கலவரத்தைக் கட்டுப்படுத்த வஜ்ரா வாகனங்கள் நிறுத்தம்!!

time to read

1 mins

May 14, 2026

Malai Murasu Salem

எங்கள் அரசு அனைவரையும்...

நம் மீது நம்பிக்கை வைத்து தீர்மானமாக வாக்களித்தனர்.

time to read

1 mins

May 13, 2026

Translate

Share

-
+

Change font size