Try GOLD - Free
கடன் கொடுமைகளுக்கு கடிவாளம்!
Dinamani Tiruvannamalai
|April 29, 2025
அனைவரையும் கடனாளியாக்குவது என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று. சுலபத் தவணைகள் என்று ஆசைகாட்டி கடனாளியாக்குவதும், அதைத் திருப்பித் தரமுடியாமல் போகும்போது வாடிக்கையாளர்களை பல்வேறு வகைகளில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் கடைசியில் அவர்களது சொத்துகள், சேமிப்புகளை சட்டப்படி அபகரித்துக் கொள்வதும் வாடிக்கையாகவே மாறி இருக்கின்றன.
-
கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளைக் காட்டினால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா தமிழக பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதிக வட்டியிலிருந்து மக்களைக் காக்கும் வகையில், தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குபவர்கள் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவை ஏற்கெனவே அமலில் இருந்தாலும் இப்போது கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் மிகவும் அவசியமான ஒன்று.
தென்காசி அருகேயுள்ள காசிதர்மத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை காரணமாக இவர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் 2017, அக்டோபர் மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி பிரச்னை மீதான பரவலான கவனத்தை இந்தச் சம்பவம் ஈர்த்தது என்றாலும், அதன் பிறகும் இது போன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.
அரசுப் பள்ளி ஆசிரியர்களான விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த தம்பதி லிங்கம், பழனியம்மாள். இவர்கள் கடன் தொல்லை யால் கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி தங்கள் மகன், மகள், இரு மாதக் குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
This story is from the April 29, 2025 edition of Dinamani Tiruvannamalai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
என்சிபிஎச்-பதிப்புப் பல்கலைக்கழகம்
தமிழ் மண்ணில் புத்தக வாசிப்பை மக்கள் மயப்படுத்தும் பணியில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951-ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.
3 mins
June 01, 2026
Dinamani Tiruvannamalai
பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்
நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
1 min
June 01, 2026
Dinamani Tiruvannamalai
கட்டு - இயக்கு - சுரண்டு!
மத்திய நெடுஞ்சாலைத் துறை 2008-இல் இயற்றிய சட்டத்தின் படி ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையிலான இடைவெளி குறைந்தபட்சம் 60 கி.மீட்டர் இருக்க வேண்டும்.
2 mins
June 01, 2026
Dinamani Tiruvannamalai
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு
பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் மிகை லாபத் தடுப்பு வரியை மத்திய அரசு குறைத்தது.
1 min
June 01, 2026
Dinamani Tiruvannamalai
ஜவ்வாது மலையில் பழங்காலக் கோயில் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் பழங்காலக் கோயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Tiruvannamalai
அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது
திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை மேற்கு வங்க காவல் துறை கைது செய்தது.
1 mins
June 01, 2026
Dinamani Tiruvannamalai
உடல் நலத்தின் அடித்தளம்!
வேளாண் வருவாயில், கால்நடை வளர்ப்பு ஓர் அங்கமாக உள்ளது. வேலைவாய்ப்பு, உரம், உழவுத் தொழிலுக்கான உதவி ஆகியவற்றை இது வழங்குகிறது.
2 mins
June 01, 2026
Dinamani Tiruvannamalai
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Tiruvannamalai
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Tiruvannamalai
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Translate
Change font size
