Facebook Pixel மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு! | Dinamani Tiruvannamalai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!

Dinamani Tiruvannamalai

|

March 21, 2025

உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.

- ஆர்.நடராஜ்

ம்பை பாந்த்ரா நகர்ப்புறத்தில் ஒரு பொது உரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த காணொலி நிகழ்வில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் நிபுணர் பிரையான் ஜான்சன் பங்கேற்றார். நிகழ்ச்சியின் நடுவில் அவர், 'சுற்றுப்புறக் காற்றில் அதிக மாசு படிந்துள்ளது; தொண்டையை எரியச் செய்கிறது; கண்களில் நீர் கசிகிறது; தோல் வறண்டு வருவதுபோல் இருக்கிறது' என்று கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; மாசுக் கட்டுப்பாடு பிரச்னையை முன் வைத்தது. மனிதனின் உயிர் பாதுகாப்புக்கும் சுகமான வாழ்க்கைக்கும் முக்கியமானவை ஆரோக்கிய உணவு, மாசில்லாத காற்று, சுத்தமான குடிநீர்.

போகி பண்டிகையின்போது பழைய பொருள்களைக் கழித்து வீட்டைச் சுத்தம் செய்து பொங்கல் தின நாளை வரவேற்கத் தயாராக வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், அந்த நாளில் பழைய பொருள்களுடன் பிளாஸ்டிக், வாகன டயர் எல்லாவற்றையும் கலவையாக வீட்டு வாசலில் கொளுத்தும் கொடிய பழக்கம், சீர் செய்ய முடியாத மாசைப் படரச் செய்கிறது.

சமீபத்தில் கட்டட வேலையின்போது எழும் தூசு, கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாழாக்கக் கூடாது என்ற வகையில் சென்னை மாநகராட்சி அதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுமானப் பகுதியைச் சுற்றி துணியால் மூடப்பட வேண்டும்; கழிவுகளோ துகள்களோ வெளியில் விழக்கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறுபவர்களுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது சென்னையில் பல இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதும் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதுவும் இரவு -பகலாக. இதனால், அக்கம்பக்கத்தினர் படும்பாடு சொல்லி மாளாது. விதிகள் ஏட்டளவில் மட்டும் இல்லாது, கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvannamalai

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவிலிருந்து கேரள பிரதிநிதி நீக்கம்

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் எதிர்ப்பு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvannamalai

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvannamalai

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tiruvannamalai

டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvannamalai

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Translate

Share

-
+

Change font size