Facebook Pixel குடியரசுத் தலைவரின் கேள்விகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Dinamani Tiruvallur

|

July 23, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி, ஜூலை 22:

குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள விவகாரங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே, இதுகுறித்து ஒரு வாரத்துக்குள், அதாவது வரும் 29-ஆம் தேதிக்குள் பதிலை சமர்ப்பிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

தமிழகம், கேரளம் ஆட்சேபம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த அரசியல் சாசன அமர்வில் வழக்கு செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் பி.வில்சன் மற்றும் கே.கே. வேணுகோபால் ஆகியோர், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். குடியரசுத் தலைவரின் கேள்விகளை விசாரணைக்கு அனுமதித்ததை அவர்கள் கேள்வி எழுப்பினர்.

வில்சன் வாதிடுகையில், 'குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்புகளில் விளக்கங்கள் அளித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் மீண்டும் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விகள் விசாரணைக்கு உகந்தவையல்ல என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு' என்றார்.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani Tiruvallur

உண்மைத் தொண்டர்களை எதிரியாகப் பார்க்கிறது அதிமுக தலைமை

அதிமுகவில் உழைக்கும் உண்மைத் தொண்டர்களை கட்சித் தலைமை எதிரிகளாகப் பார்ப்பதாக அந்தக் கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tiruvallur

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம்

அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

time to read

1 min

June 16, 2026

Dinamani Tiruvallur

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Tiruvallur

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிராக அதிமுக வழக்கு

4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கவும் கோரிக்கை

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: பொறியாளர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது கார் மோதியதில் பொறியாளர்கள் 2 பேர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞர் கைது

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size