Try GOLD - Free
தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு
Dinamani Thoothukudi
|November 01, 2025
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
-
ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன்மூலம் தெலங்கானா அமைச்சரவையின் பலம் 16-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஆளுநர் ஒதுக்கீட்டில் அசாருதீனை சட்ட மேலவை உறுப்பினராக்க (எம்எல்சி) தெலங்கானா அரசு பரிந்துரைத்தது. ஆனால், நியமனத்துக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் அசாருதீன் அமைச்சராகியுள்ளார்.
தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த அமைச்சர்கள் யாரும் இதுவரை இல்லாத நிலையில், காங்கிரஸ் தேசிய தலைமையின் பரிந்துரையில் அசாருதீன் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
'அமைச்சரானது மகிழ்ச்சி':
பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அசாருதீன், 'மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அமைச்சரவையில் எந்தப் பொறுப்பு அளித்தாலும் முழுமூச்சுடன் பணியாற்றுவேன்' என்றார்.
This story is from the November 01, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Thoothukudi
குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்
'குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்று சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.
2 mins
May 29, 2026
Dinamani Thoothukudi
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.
1 min
May 29, 2026
Dinamani Thoothukudi
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Thoothukudi
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Thoothukudi
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Thoothukudi
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Thoothukudi
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Thoothukudi
கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வு தொடர்பான தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
May 28, 2026
Dinamani Thoothukudi
முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் சித்தராமையா
காங்கிரஸ் மேலிட உத்தரவின்பேரில், கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா வியாழக்கிழமை (மே 28) ராஜினாமா செய்கிறார். புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்படுகிறார்.
1 mins
May 28, 2026
Listen
Translate
Change font size

