Try GOLD - Free
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
Dinamani Thoothukudi
|October 12, 2025
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
பனை மரத்தின் பாதுகாப்பு இப்போது எப்படி இருக்கிறது?
தமிழ்நாட்டு மாநில மரம் பனை. இதற்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக பனை மரம் வெட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசு பனை மரத்தைப் பாதுகாக்க ஓர் உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு அடிப்படையில், இனி யாரும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் பனை மரத்தை வெட்ட முடியாது. இது போன்ற உத்தரவு புதுவையிலும் பிறப்பிக்க வேண்டும். இப்போது பனைக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது.பனை மரம் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரிகிறதே?
பனை மரம் ஏறுவோர்தான் பனை மரத்தைப் பாதுகாத்து வந்தனர். பனை ஓலைகளைக் கழித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாத நிலையில், பனை மரம் ஏறுவோர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். பழக்கம் இருந்தால் மட்டும்தான் பனை மரம் ஏற முடியும். டாஸ்மாக் வந்து விட்டதால் இப்போது பனை மரம் இந்தப் பயன்பாட்டுக்கு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது.எத்தனை ஆண்டாக பனை விதைகளை நட்டு வருகிறீர்கள்?
இளைஞர்கள் ஒன்று திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்கும் எண்ணம் கொண்டது. அதைப் போன்றதுதான் பனையின் பாரம்பரியத்தை மீட்பதும். அதற்காகத்தான் 2015 முதல் பனை விதைகளை நட்டு வருகிறேன். கடலோரப் பகுதிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள், சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 4.5 லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பனைகள் பிழைத்துக் கொண்டன. இப்போது அவை ஓரடி, இரண்டு, மூன்றடி வரை வளர்ந்துள்ளன.This story is from the October 12, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 02, 2026
Dinamani Thoothukudi
காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
June 02, 2026
Dinamani Thoothukudi
மாநில சீனியர் நீச்சல் போட்டி: 5 புதிய சாதனைகள்
சென்னையில் நடைபெற்ற மாநில சீனியர் நீச்சல் போட்டியின் முதல் நாளில் 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
1 min
June 02, 2026
Dinamani Thoothukudi
தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
2 mins
June 02, 2026
Dinamani Thoothukudi
'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி
இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.
1 min
June 02, 2026
Dinamani Thoothukudi
துரதிருஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்
துரதிருஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் போட்டியிட்டதால், தவெக அரசுக்கு தற்போது ஆதரவு அளிக்க முடியவில்லை என்று திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.
1 min
June 02, 2026
Dinamani Thoothukudi
யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Thoothukudi
மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி: 3.2 சதவீதம் அதிகரிப்பு
நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Thoothukudi
என்சிபிஎச்-பதிப்புப் பல்கலைக்கழகம்
தமிழ் மண்ணில் புத்தக வாசிப்பை மக்கள் மயப்படுத்தும் பணியில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951-ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.
3 mins
June 01, 2026
Dinamani Thoothukudi
கட்டு - இயக்கு - சுரண்டு!
மத்திய நெடுஞ்சாலைத் துறை 2008-இல் இயற்றிய சட்டத்தின் படி ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையிலான இடைவெளி குறைந்தபட்சம் 60 கி.மீட்டர் இருக்க வேண்டும்.
2 mins
June 01, 2026
Translate
Change font size
