Try GOLD - Free
இரண்டு கட்டங்களாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு
Dinamani Thoothukudi
|June 05, 2025
மத்திய அரசு அறிவிப்பு
-
புது தில்லி, ஜூன் 4: ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027-ஐ இரண்டு கட்டங்களாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ள பனிப் பிரதேசங்களில் வரும் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும்.
நாட்டின் பிற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி இந்தக் கணக்கெடுப்பு தொடங்கப்படும்.
கணக்கெடுப்பு தொடங்கும் தேதிகள் தொடர்பான அறிவிக்கை மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-இன் பிரிவு 3-இன் கீழ் உத்தேசமாக வரும் 16-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாண்டுகளில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மிகப் பெரிய கணக்கெடுப்பில் 30 லட்சத்துக்கும் அதிகமான கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
This story is from the June 05, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 06, 2026
Dinamani Thoothukudi
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்
ரஷிய அதிபர் புதின்
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
உலகிற்கு வழிகாட்டும் விஸ்வ குருவாக திகழ்கிறது இந்தியா
விழுப்புரம், ஜூன் 5: உலகுக்கு வழிகாட்டும் விஸ்வகுருவாக இந்தியா திகழ்கிறது என்று தமிழக ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவருமான ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.
1 mins
June 06, 2026
Translate
Change font size
