Facebook Pixel மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்! | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!

Dinamani Thoothukudi

|

April 16, 2025

காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.

- பழ. நெடுமாறன்

மிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 10 சட்ட முன்வடிவுகளை நீண்டகாலமாக நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளது.

"ஓர் அரசமைப்பு எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துபவர்கள் நேர்மையாளர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாக இருக்கும்" என்று அரசியல் சட்ட சிற்பி அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் கூறியதை நீதிபதிகள் இந்தத் தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளனர். அரசமைப்புச் சட்ட விழுமியங்களை நிலைநாட்டுவதற்கான நீதித் துறையின் உறுதியை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளது.

ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளில் மாபெரும் மாற்றங்களையும், விளைவுகளையும் ஏற்படுத்தப் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகக் காலங்காலமாக நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களுக்கும் அந்தந்த மாநில அரசுகளுக்கும் இடையே பல்வேறு வகையான மோதல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.

சட்டப்பேரவைகளால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பது குறித்த காலக்கெடுவை இந்தத் தீர்ப்பு நிலைநிறுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பையும், இன்னும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் சிறிதளவும் மதிக்காமல் ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிக்கண்டனம் தெரிவித்துள்ளது.

வேறு யாராக இருந்தாலும் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் தனக்கெதிராக அளித்த தீர்ப்பு வெளியானவுடனேயே தனது பதவியிலிருந்து விலகியிருப்பார்கள்; ஆனால், தமிழக ஆளுநரோ எதுவும் நடக்காததுபோலத் தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Thoothukudi

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Thoothukudi

வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Thoothukudi

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Thoothukudi

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Thoothukudi

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Thoothukudi

இன்று பாஜக கூட்டணி கூட்டம்

பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Translate

Share

-
+

Change font size