Facebook Pixel சவால்களை வென்ற சாதனை! | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சவால்களை வென்ற சாதனை!

Dinamani Thoothukudi

|

March 22, 2025

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்பி வரலாறு படைத்திருக்கிறார்கள்.

அவர்களுடன் சேர்ந்து நிக் ஹேக், அலெக்ஸாண்டர் கோர்போனா ஆகியோரும் திரும்பியுள்ளனர். தனிமைப்பட்ட நிலையில், பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைந்திருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அசாத்திய மனத்துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் தங்களது உயிரைத் தக்க வைத்துக்கொண்டு காத்திருந்த அந்த இருவரையும் ஒட்டுமொத்த உலகமும் பிரமிப்புடன் பார்த்து வியக்கிறது.

கடந்த 286 நாள்கள் அண்டவெளியில் தனித்து விடப்பட்ட அந்த இருவரும், சுமார் 17 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்துக்கு அருகில் பாராசூட்டுகளின் உதவியுடன் பாதுகாப்பாகத் திரும்பியபோதுதான் உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரு வீரர்களும் விண்வெளியில் தன்னந்தனியாகத் தங்கியிருந்த 286 நாள்களில் பூமியை 4,576 முறை சுற்றி வந்து, சுமார் 19.5 கோடி கி.மீ. தொலைவு பயணித்துள்ளனர் என்பதைக் கேட்கும்போதே தலை சுற்றுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி, அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாஸா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர். அங்கே எட்டு நாள்கள் தங்கி, தங்கள் ஆய்வை முடித்துவிட்டு பூமி திரும்புவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?

ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

June 04, 2026

Dinamani Thoothukudi

வ.வே.சு. அய்யர் நினைவு தினம்: குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரை

time to read

2 mins

June 04, 2026

Dinamani Thoothukudi

நோயாளிகளுக்கு இனி பிரத்யேக ஊசி!

மருத்துவமனைகளுக்கு என்எம்சி அறிவுறுத்தல்

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை

இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

கார் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: காயமடைந்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு

சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Thoothukudi

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 04, 2026

Translate

Share

-
+

Change font size