Try GOLD - Free
பாரதத்தின் வளர்ச்சிப் பயணம்
Dinamani Nagapattinam
|May 26, 2026
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
-
சுதந்திரத்துக்குப் பிறகு பாரதத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறி கௌரவமான வாழ்க்கையை அடைந்துள்ளனர்.
இதுவரை, வீடற்ற ஏழைகளுக்காக 4 கோடி நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பமும் வங்கிச் சேவைகளைப் பெற்றுள்ளனர். அதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் தொழில் மேம்பாடும் உறுதிப்பட்டு வருகிறது.
திறந்தவெளி கழிப்பறை இல்லாத நாடாக பாரதம் சுகாதாரத்தில் முன்னேற வேண்டுமென விரும்பினோம். 60 மாதங்களுக்குள் 60 கோடி மக்களுக்கு அதை தேசம் சாத்தியமாக்கியிருக்கிறது.
கிராமத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டவர்களை இளம்வயதில் பார்த்திருக்கிறேன். அவர்களது குடும்பத்தின் வேதனையைக் கண்டு வருந்தியிருக்கிறேன். தற்போது மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான உறுதியோடு 'ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுகிறது. நாடு முழுவதும் 44 கோடி மக்கள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 2.5 கோடி மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.
நடுத்தரக் குடும்பங்களில் முதியவர்களுக்கான மருத்துவச் செலவு கடினமானதாக இருந்த சூழல் மாறிக்கொண்டு வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 'வயோபந்தனா' திட்டத்தில் இலவச மருத்துவ வசதி பெற்றுள்ளனர். மூத்த குடிமக்களுக்கான சிறப்பு மருத்துவமனைகளும் இயங்குகின்றன. சென்னை கிண்டியில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கல்வி கற்கும் மாணவர்களுக்கு பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் மூலம் கடனுதவியும், தெருவோரம் வியாபாரம் செய்வோருக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டம் மூலம் கடனுதவியும் என அனைத்துத் தரப்பு மக்களுக்குமான கடனுதவி ஆதரவு அளிக்கப்படுகிறது.
This story is from the May 26, 2026 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Nagapattinam
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Nagapattinam
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Nagapattinam
தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்
வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜும் இணைந்தனர்
1 mins
May 29, 2026
Dinamani Nagapattinam
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Nagapattinam
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Nagapattinam
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Dinamani Nagapattinam
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Dinamani Nagapattinam
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Dinamani Nagapattinam
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.
1 min
May 28, 2026
Listen
Translate
Change font size

