Facebook Pixel பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு | Dinamani Nagapattinam - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு

Dinamani Nagapattinam

|

March 08, 2025

பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, மார்ச் 7:

கர்நாடக சட்டப் பேரவையில் சாதனை எண்ணிக்கையாக 16-ஆவது பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

மாநில பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்காற்றி வரும் பெங்களூரு மாநகரின் அடிப்படை உள்கட்டமைப்புக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. பெங்களூரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வழக்கமாக ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இப்போது, அந்த நிதியை ரூ.7,000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்தவும், மானியத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் சிறப்புப் பயன்பாட்டு திட்டம் வகுக்கப்படும்.

'பிராண்ட் பெங்களூரு பசுமை பெங்களூரு' திட்டத்தின் கீழ் ரூ. 35 கோடி செலவில் 14 ஏரிகள் மேம்படுத்தப்படும். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் மூலம் வர்த்தூர், பெலந்தூர் ஏரிகளைப் புதுப்பிக்க ரூ. 234 கோடியில் பணிகள் தொடங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டத்தை அமல்படுத்த ரூ. 413 கோடி ஒதுக்கப்படும்.

79.65 கி.மீ. தொலைவுக்கு 68 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சேவையுடன் மேலும் 98.60 கி.மீ. மெட்ரோ ரயில் தடம் சேர்க்கப்படும். மெட்ரோ ரயில் சேவை தேவனஹள்ளி வரை விரிவாக்கப்படும்.

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வெளிவட்ட சாலை திட்டத்தை 'பெங்களூரு வர்த்தக வழித்தடம்' என்று பெயர் மாற்றம் செய்து ரூ.27,000 கோடியில் செயல்படுத்தப்படும்.

பெங்களூரில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க, முறை சார் புதைசாக்கடை கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ. 3,000 கோடி ஒதுக்கப்படும்.

ரூ. 40,000 கோடியில் பெங்களூரு மாநகராட்சி மேற்கொண்டிருக்கும் வடக்கு- தெற்கு மற்றும் கிழக்கு- மேற்கு சுரங்கப்பாதை அமைக்க ரூ.19,000 கோடிக்கான வாக்குறுதியை அரசு அளிக்கிறது.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Nagapattinam

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற இரு அணிகளிடையே மோதல்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு புதிய மாவட்டச் செயலர் இரா. பசுபதி, முன்னாள் மாவட்டச் செயலர் சி.வி. சண்முகம் அணியினரிடையே மோதல் எழும் சூழல் நிலவியதால், கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டு, பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Nagapattinam

தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!

இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வெள்ளைக் குள்ளன்

இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.

time to read

2 mins

May 17, 2026

Translate

Share

-
+

Change font size