Try GOLD - Free
ஒரே அணி... ஒரே கனவு..!
Dinamani Kanchipuram
|November 09, 2025
இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் 1983, 2011 -ஆம் ஆண்டுகள் மறக்கமுடியாதவை. 1983-இல் கபில்தேவும், 2011-இல் தோனியும் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார்கள். இப்போது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி தன் பங்குக்கு, ஹர்மன் ப்ரீத் கௌர் தலைமையில் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவில் வாழும் 70 கோடி பெண்களுக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாக நவம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு மாறியுள்ளது.
ஐரோப்பிய - ஆப்பிரிக்கப் பெண்களுடன் ஒப்பிடுகையில், 'இந்தியப் பெண்கள் உடல் பலவீனமானவர்கள்' என்ற அனுமானங்கள் தகர்த்து எறியப்பட்ட தருணம். நீல நிற உடை அணிந்த வீராங்கனைகள், இந்த தலைமுறைக்கும், இனி வரும் தலைமுறைக்கும் ஊக்கமளிப்பார்கள்.
இந்தியப் பெண்கள் அணியில் அனைவரும் தங்கள் தங்கள் பங்களிப்பைச் செய்தாலும் கேப்டன் ஹர்மன் ப்ரீத், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணி அதிக ரன்கள் எடுக்கவிடாமல் செய்ததில்தான் இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
2005, 2017-இல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் இறுதி வரை வந்தாலும் இந்திய மகளிரால் வெற்றி பெற முடியவில்லை. 2025 உலகக் கோப்பைக்கான போட்டித் தொடரில் மூன்று முறை தோல்வி அடைந்தாலும், ஃபீனிக்ஸ் பறவை போல இந்திய அணி, ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வெற்றி கண்டு இறுதிப் போட்டியில் அடி எடுத்து வைத்தது.
உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, நியூஸிலாந்து பெண்கள் அணியினர் பங்கு போட்டு வந்தாலும் இந்த முறை இந்தியா நான்காவது சக்தியாக விசுவரூபம் எடுத்துள்ளது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம், மகளிர் அணிக்கு ரூபாய் 51 கோடியும், சர்வதேச கிரிக்கெட் வாரியம் ரூபாய் 38 கோடியும் பரிசாக வழங்கியது.
கிரிக்கெட் ஆர்வம் அதிகமாக இருக்கும் இந்தியாவில், பெண்கள் கிரிக்கெட்டுக்கு இந்தப் பரிசுத் தொகை அதிக அளவில் இளம்பெண்களை கிரிக்கெட்டுக்கு ஈர்க்கும்.
This story is from the November 09, 2025 edition of Dinamani Kanchipuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
இங்கிலாந்துடனான மகளிர் டி20 யஸ்திகா, ஜெமிமா, நந்தினி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி
மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min
May 30, 2026
Dinamani Kanchipuram
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
பக்ரீத்: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் வியாழக்கிழமை (மே 28) பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Kanchipuram
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Kanchipuram
பிகாரில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்
பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி நடைபெறுகிறது.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
உக்ரைன் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
அமைதிப் பேச்சுவார்த்தை உள்பட போர் நிறுத்த முன்னெடுப்புகள் குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Listen
Translate
Change font size

