Facebook Pixel மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு | DINACHEITHI - MADURAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு

DINACHEITHI - MADURAI

|

June 22, 2025

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்துகணிப்புகளை நடத்தி உள்ளது.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர்.

அதன் விவரம் வருமாறு :-

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முதல்வராக 30.80 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக 19.97 சதவீதம் பேரும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு 17.38 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கு 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனுக்கு 14.71 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

வருகிற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி, 4-வது இடத்தில் சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் விஜய் கடிதம்

\"நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது., விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\" என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருக்கிறார்.

time to read

1 mins

June 26, 2026

DINACHEITHI - MADURAI

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்- பிரதமர் மோடி ஆலோசனை

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு ?

time to read

2 mins

June 25, 2026

DINACHEITHI - MADURAI

உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்

முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - MADURAI

வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண் அறிவிப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான உதவி எண் 1091 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

June 23, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் விஜய்க்கு இன்று 52-வது பிறந்தாள்: புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்?

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22ம் தேதி) கொண்டாட உள்ளார் விஜய்.

time to read

1 min

June 22, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - MADURAI

60 ஆண்டுகால உறவு முறிந்தது

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - MADURAI

காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size