Facebook Pixel இப்படியொரு உலகப் பயணம் இப்படித்தான் சாத்தியமானது..! | Kungumam - entertainment - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

இப்படியொரு உலகப் பயணம் இப்படித்தான் சாத்தியமானது..!

Kungumam

|

10-04-2026

“என் பாஸ்போர்ட்டில் ஒரு முத்திரை கூட இல்லாமல் காலாவதியாகிவிடக்கூடாது என்பதற்காகவே தாய்லாந்து பயணத்தில் சேர்ந்தேன்...” என்று டாக்டர் ஹிதேஷ் கிண்டலாகச் சொல்கிறார்.

- த.சக்திவேல்

இப்படியொரு உலகப் பயணம் இப்படித்தான் சாத்தியமானது..!

ஆனால், உண்மையில் அவர் மீண்டும், மீண்டும் பயணம் செய்யவே விரும்புகிறார்.

முப்பது வயதான ஹிதேஷ், மைசூரைச் சேர்ந்தவர். யோகா மற்றும் தடுப்பு மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இப்போது ஓர் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மருத்துவ ஆலோசகராகவும், உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

அவருக்குக் கண்பார்வை குறைபாடு உள்ளது. இருபது வயதின் பிற்பகுதியில் பார்வையை இழந்ததால், இரவு நேரங்களில் அவரால் எதையும் பார்க்க முடியாது.

"எனக்கு எப்போதுமே பயணம் செய்வது பிடிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து நானே கார் ஓட்டிச் செல்வேன். ஒவ்வொரு வருடமும் சுற்றுலா செல்ல திட்டமிடுவேன்...' என்கிற ஹிதேஷின் பார்வை மங்கத் தொடங்கியதும், பயணம் செய்வது சிக்கலானது.

நண்பர்கள் ஆதரவாக இருந்தபோதிலும், அவருடைய உண்மையான தேவைகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

உதாரணத்துக்கு, ஒரு நிலப்பரப்பை விவரிப்பது, படிக்கட்டு வரும்போது எச்சரிப்பது அல்லது கூட்டமான தெருவில் சைகை காட்டுவது போன்றவை.

காலப்போக்கில் பயணங்களிலிருந்து ஒதுங்கினார், ஹிதேஷ். ஒரு நாள் 'ரைசிங் ஸ்டார் கிள்தே செஹ்ரே' என்ற அமைப்பு ஏற்பாடு செய்த தாய்லாந்து பயணம் குறித்த வாட்ஸ் அப் செய்தி அவருக்கு வந்தது.

ஒரு நிமிடம் தயங்கியவர், பிறகு அதில் இணைந்தார். அங்கு அவருக்குக் கிடைத்தது வெறும் உதவி மட்டுமல்ல, பயணத்துக்கான புதிய பாதை; ஒரு மாற்றத்திற்கான தொடக்கம்.

சுமார் முப்பதாண்டுகளாக சுற்று லாத்துறையே தனது வாழ்க்கை என இயங்கி வருபவர், அமித் ஜெயின். தில்லியைச் சேர்ந்த அமித்துக்கு சர்வதேச பயணத் திட்டங்கள் மற்றும் விருந்தோம்பல்தான் முக்கிய தொழில்.

2019ம் வருடம் தனது மகளுடன் சென்ற ஒரு பயணத்தின்போது, சில பார்வையற்ற நபர்களைச் சந்தித்துப் பேசினார் அமித். இது அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்களின் வாழ்க்கையிலும் திருப்புமுனை.

ஆம்; அந்த பார்வையற்றவர்கள் அமித்திடம் தாங்களும் உலகைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகவும், ஆனால், சமூகம் உண்டாக்கி வைத்திருக்கும் தடைகளால் தாங்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கின்றனர்.

image

MORE STORIES FROM Kungumam

Kungumam

Kungumam

தூக்கமினமை ஒரு சர்வதேச நோய்!

‘நைட்டுல எவ்வளவு நேரம் புரண்டு படுத்தாலும் தூக்கமே வரல சார்.

time to read

3 mins

10-04-2026

Kungumam

Kungumam

இது பாலுமகேந்திராவின் கடைசிப் படம்!

\"நீளிரா' திரைப்படம் இயக்குநர் பாலுமகேந்திரா சாருடைய கடைசி படம் என்று சொல்லலாம்.

time to read

2 mins

10-04-2026

Kungumam

Kungumam

காத்தடிக்குது...

நெல்லை என்ற பெயரைச் சொன்னாலே அல்வாவின் நறுமணம்தான் பலரின் நினைவுக்கு வரும்.

time to read

3 mins

10-04-2026

Kungumam

Kungumam

மாருதி டூ லம்போர்கினி

சமூக வலைத்தளங்களில் பச்சை வண்ண லம்போர்கினி கார் ஒன்று செம வைரலாகி வருகிறது.

time to read

1 min

10-04-2026

Kungumam

Kungumam

வட இந்தியாவில் பட்டையைக் கிளப்பும் கலப்பட பிசினஸ்!

இந்தியாவில் கலப்பட சந்தை கொடிகட்டிப் பறப்பதற்கு சரியான தண்டனைகள் இல்லை என்பதற்கான சாட்சியாக ஒன்றிய அரசின் புள்ளிவிபரங்களே இருப்பதாக உணவுப் பாதுகாப்புக் குறித்து சிந்திக்கும் தன்னார்வலர்கள் சொல்கிறார்கள்.

time to read

1 min

10-04-2026

Kungumam

Kungumam

அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம்...தமிழ்நாடுதான் பெஸ்ட்..!

இந்தியாவில் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில்தான் அறிவியல் ஆய்வகம் அதிக முள்ளதாக சமீபத்தில் ஒன்றிய அரசின் கல்வியமைச்சகம் வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

time to read

2 mins

10-04-2026

Kungumam

Kungumam

உலகைத் தாக்கும் சூப்பர் எல் நீனோ... தகிக்கும் தமிழகம்..!

சூப்பர் எல் நினோ... இப்படி தான் உலக வானிலை ஆய்வாளர்கள் இந்த ஆண்டை குறிப்பிடுகின்றனர்.

time to read

3 mins

10-04-2026

Kungumam

Kungumam

FDFS மாஃபியாக்கள்..!

ஓசியில் டிக்கெட் கொடுத்து பாசிடிவ் விமர்சனம்... நடிகர்களிடம் பணம் வாங்கி ‘எதிரி' நடிகரின் படத்துக்கு நெகடிவ் விமர்சனம்...

time to read

4 mins

10-04-2026

Kungumam

Kungumam

அமெரிக்காவை உலுக்கும் மில்லியன் மார்ச்சும் டாலரில் 'டிரம்ப் கையெழுத்தும்!'

முதன் முதலில் மில்லியன் மார்ச் என்று ஏமன் நாட்டில்தான் துவங்கி னார்கள்.

time to read

3 mins

10-04-2026

Kungumam

Kungumam

சிறார் உடல் பருமன்... டாப் 3ல் இந்தியா... மீள என்ன வழி?

சமீபத்தில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட சிறார்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 3ல் இருப்பதாக வந்திருக்கும் தகவல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

time to read

3 mins

10-04-2026

Listen

Translate

Share

-
+

Change font size