Facebook Pixel வயிறும் உயிரும் | Andhimazhai - entertainment - Read this story on Magzter.com

Try GOLD - Free

வயிறும் உயிரும்

Andhimazhai

|

AUG 2023

திரைப்படம் என்பதே ஒரு காட்சிப் பிழைதான். மூளையில் வேகமாய்ப் பதிந்து மறையும் படக்காட்சிகளே அதில் காணும் உருவங்களில் அசைவை உண்டு பண்ணுவதால் ஏற்படும் ஒரு தோற்றப் பிழைதான்.

-  கலாப்ரியா

வயிறும் உயிரும்

அதிலும் சினிமாவில் தந்திரக் காட்சிகள் வந்த பின் புராண இதிகாசக் கதைகளின் சம்பவங்களுக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்தது என்று சொல்லலாம்.

1940 வாக்கில், ஏழு வகை திரைக்கதைகளில் ஒன்றான இரட்டை வேடக் கதைகள் படமாகத் தொடங்கியது தமிழில் பி.யு சின்னப்பா நடித்த உத்தம் புத்திரன் இந்திய அளவிலேயே இதில் முதல் என்று சொல்லலாம். தந்திரக் காட்சியாக அவற்றைப் படம் பிடிக்க வேண்டியது வந்த போது கதாநாயகன் போல உருவ அமைப்பு உள்ளவர்களின் தேவை ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.கொக்கோ என்று ஒரு நடிகர் உண்டு. என் தலைமுறைக்கும் முந்தியவர். பெரிய சாண்டோ. வீர தீரக் காட்சிகளுக்குப் பேர் பெற்றவர். 'ஏல, எஸ். எஸ். கொக்கோ ரெண்டு ட்ரெயின் ஓடிக்கிட்டிருந்தா ரெண்டையும் சேர்த்து ஒரே தாவா தாவிருவாரு தெரியுமா...' என்று எங்கள் சின்னவயதில் அவரது பிரலாபத்தைப் பேசக் கேட்டதுண்டு. அது சும்மா வதந்திதான். ஆனால் அப்படி உயிரைப் பணயம் வைக்கும் நடிகர்கள் 1944 இல் இருந்தார்கள். பத்தே ஆண்டுகளில் அந்த நிலைமை மாறி விட்டது.

கதநாயக, நாயகிக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து உண்டாகி அவரைப் படம் முடியும் மட்டும் பத்திரமாக வைக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கும் நாயக நாயகியருக்கும் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் 1958இல் சீர்காழியில் நடந்த அவரது நாடகத்தில், வழக்கம் போல நடிகர் குண்டுமணியைத் தூக்கி அடிக்கும் காட்சியில் கால் முறிந்து படுக்கையில் இரண்டு மாதங்கள் வரை கஷ்டப்பட்டார். 1958 ஆகஸ்டுக்குப் பின் 1959 டிசம்பர் 31 வரை அவருக்குப் படமே வெளி வரவில்லை. அப்படிப் படமே வரவில்லை என்ற பேர் வரக்கூடாதென்ற கட்டாயத்தில் 1959 டிசம்பர் 31 அன்று 'தாய் மகளுக்குக் கட்டியதாலி' படம் வந்தது. அதற்கப்புறம் அவர் ரிஸ்க் எடுக்கவில்லை.

MORE STORIES FROM Andhimazhai

Andhimazhai

Andhimazhai

குடும்பத்தின் கதை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

குடும்ப அரசியலும் மத அரசியலும்

இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

time to read

6 mins

March 26

Andhimazhai

Andhimazhai

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அவர் பாடும் பாடல்!

எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

நிலவின் கதைகள்

\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.

time to read

2 mins

March 26

Andhimazhai

Andhimazhai

ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!

பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.

time to read

1 mins

March 26

Andhimazhai

Andhimazhai

வெற்று சாகசம்: முதல்வன்

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

time to read

2 mins

March 26

Translate

Share

-
+

Change font size