Try GOLD - Free
விண்ணைத் தாண்டும் காற்று ராசிக்காரர்கள்!
Balajothidam
|February 28,2025
பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.
-
தவழும் தென்றலாகவும், சீறும் புயலாகவும், தன்னை மாற்றி கைசேர்க்கும் மகத்தான இயல்பைக்கொண்டு மூச்சாக உயிர் அளிக்கும் உயிர்க் காற்றாய் உள்கலந்து உலாவிக்கொண்டு திகழ்கின்றது.
பஞ்சாங்கத்தில் நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்கின்ற பகுப்பில் கரணத்தை கைக்கொண்ட காற்று மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அவையங் களில் மூக்குக்கும், காற்றிற்கும், கரணத்திற் கும், பாலம் அமைத்துக்கொண்டு பயணிக் கின்றது.
வரி வடிவத்தை தழுவுவதற்குமுன்பு ஒலி வடிவமான வேதங்களும், உபநிடதங்களும், ஏன் நாம் பேசுகின்ற வார்த்தைகளும்கூட காற்றின் துணைகொண்டுதான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
மாபெரும் சாகசங்களை நிகழ்த்தும் மந்திர உச்சாடணங்கள் காற்றின் முழு சக்தியின் துணைகொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து காற்றின் ஆற்றல் நமக்கு புலப்படும்.
ராசிகளில் மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள் ஆகும்.
காற்று ராசியில் பிறந்தவர்கள் தங்களின் எண்ணங்களுக்கு சிறகு பூட்டி விண்ணைத் தாண்டி பறக்கச் செய்யும் ஆற்றல் உடையவர் கள்.
குறிப்பாக மிதுன புதன், துலா சுக்கிரன், கும்ப சனி என்று வாடை, தென்றல், புயல் என்று பரிமாணப்பட்டு வீசும் தன்மையில் மிளிர்கின்றது.
மிதுன காற்று கவி, இசை, கலை என்று பயணித்து இரட்டைத்தன்மையில் ஒரு நாணயத் தின் இரு புறங்களை ஆராயும் தன்மையுடையது. கலைகளுக்கும், நுண்ணிய அறிவுக்கு, அதிபதி யான புதன் வீட்டில், வேகத்தை பறைசாற்றும் செவ்வாயின் மிருகசீரிடமும், பிரம்மாண்டத்தை அருளும் ராகுவின் திருவாதிரையும், அறிவின் ஆளுமையை அளிக்கும் குருவின் புனர்பூசமும், சமூகத்தில் ஒரு கௌரவமான இடத்தில் இவர்களை நிலைநிறுத்தி வைத்திருக்கும்.
அவசியமான உரையாடலும், மற்றவர்களுக் கான அர்ப்பணிப்பையும், வழிகாட்டும் உள்ளமும் படைத்தவர்கள் இவர்கள்.
எந்த விஷயத்தையும் ஆழ்ந்து கற்காமல் மேலோட்டமாக நுனிப்புல் மேயும் குணமுடையவர்கள்.
காலங்களில் அவள் வசந்தம் என்பதற்கு இணங்க மே 21 முதல் ஜூன் 20 வரையுள்ள காலம் மிதுன காலமான வசந்த காலத்தை குறிக்கின்றது.
ஒரு பருவத்தின் இறுதியை தன்னகபடுத்தி ஆண்டுகொண்டு இனிமையான வாழ்வியலில் வளம் பெறும் ராசி மிதுனம் ஆகும்.
This story is from the February 28,2025 edition of Balajothidam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Balajothidam
Balajothidam
நலம் தரும் லக்னப் புள்ளி!
ஜோதிடத்தில் லக்னம் அல்லது லக்னப்புள்ளி என்பது உயிர்நாடியாக கருதப்படுகிறது.
1 mins
May 02-08, 2026
Balajothidam
80% முதல் 97% வரை துல்லியமாக ஜோதிடம் கணிப்பது எப்படி?
ஒரு மனிதனின் ஆதிமுதல், அந்தம் வரை, சுபம் மற்றும் அசுப பலன்களை அனுபவித்து, தன்னுடைய வினைகளை குறைப்பதற்கு முயற்சி செய்துவருகிறார்.
1 min
May 02-08, 2026
Balajothidam
நலம் தரும் நட்சத்திரம்!
'கயல்விழி கண்ணார் தங்கள் முலை அணை வசந்தனாகும் பயனெடுத்துரைக்க வல்லான் பாவமும்,பழியும் பார்க்கும் வயணம் துடையனாகும் வளம் பெற வாழ வல்லான் இயல்புடை செல்வனாகும் இரேவதி நாளினானே.
1 min
May 02-08, 2026
Balajothidam
மகேஷ் வர்மா
ஒரு மனிதனின் புருவத்திற்கு மேலே... வலது நெற்றியின் கீழ் பகுதியில் மச்சம் இருந்தால், பெரிய அளவில் லாபம் இருக்காது.
1 mins
May 02-08, 2026
Balajothidam
அகத்தியர் கூறிய ஆணவ கொலை பாதகம்!
சுமார் 75 வயதுடைய ஒரு பெரியவர், நாடியில் பலனறிய வந்தார்.
3 mins
May 02-08, 2026
Balajothidam
3-ஆம் அதிபதி தரும் உபரி வருமானம்! விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3-ஆம் அதிபதி சனி ஆவார்.
2 mins
May 02-08, 2026
Balajothidam
வானியல் விஞ்ஞானமும், வேத ஜோதிடமும்...
நாம் இருக்கும் உலகம் பூமி. பூமி சூரியனைச் சுற்றுகிறது சூரியன் ஒரு நட்சத்திரம்.
2 mins
May 02-08, 2026
Balajothidam
ஜோதிட சந்தேகங்கள்!
திருமணம் மற்றும் வேலை பற்றி கேட்டுள்ளனர்.
3 mins
May 02-08, 2026
Balajothidam
மருமகளை அடையாளம் காட்டிய அகத்தியர்!
கணவன்- மனைவி இருவர் நாடியில், பலன் கேட்க வந்திருந்தனர்.
3 mins
March 14-20, 2026
Balajothidam
தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும் காலம் எது?
இந்த பூமியில் மனிதர்களுக்கு கட்டுப்படாத ஒரு சக்தி உள்ளது.
3 mins
March 14-20, 2026
Translate
Change font size
