Poging GOUD - Vrij
மர்ஹும் அஷ்ரபின் ஒலுவில் வீடுமற்றும் காணி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு
Vidivelli Weekly
|May 22, 2025
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தலைமையில் உபவேந்தரின் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வின்போது, மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மகன் அமான் அஷ்ரப், இதற்கான ஆவணங்களை, பதில் உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்புக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறைய சொத்துக்கள் இருப்பதாக அவருடைய அரசியல் எதிரிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த போதிலும், அஷ்ரப் அவரின் பெயரில் வைத்திருந்த, ஒரேயொரு அசையாச் சொத்து இந்த ஒலுவில் வீடுதான் என, இதன்போது அவரின் மகன் அமான் அஷ்ரப் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை 1995 இல் எம்.எச்.எம். அஷ்ரப் உருவாக்கியதன் மூலம் இந்த பிராந்தியத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் உயர் கல்விக்கு பெரும் பங்காற்றினார்.
Dit verhaal komt uit de May 22, 2025-editie van Vidivelli Weekly.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Vidivelli Weekly
Vidivelli Weekly
மர்ஹும் அஷ்ரபின் ஒலுவில் வீடுமற்றும் காணி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1 mins
May 22, 2025
Vidivelli Weekly
இலங்கை-பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும செயலாளராக முஜிபுர் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவியும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1 min
May 22, 2025
Vidivelli Weekly
மன்னார்-புத்தளம் வீதியை மூட நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானதே
வன்மையாக கண்டிக்கிறோம் என பாராளுமன்றில் ரிஷாத் தெரிவிப்பு
1 mins
May 22, 2025
Vidivelli Weekly
ஊவாவின் இளம் கல்வியியல் பேராசிரியர் ஜே.டி. கரீம்டீன்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஜே.டி. கரீம்டீன், பேராசிரியராக பதவியுர்த்தப்பட்டுள்ளார். இதற்கான அனுமதி திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் சபையினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் கல்வித் துறையில் பணியாற்றுகின்ற இளம் பேராசிரியர்களில் ஒருவராக இவர் திகழ்கின்றார்.
1 mins
May 22, 2025
Vidivelli Weekly
அவள் கதை" மிஸ் கோலால் ஏற்பட்ட தொடர்பு மத்ஹபை மாற்றிய விவாக பதிவாளர்
இருள் சூழத்தொடங்கிய மாலை வேளையில் ஒரு பெண்ணின் குரல்...சேர்... திரும்பிப் பார்க்கிறேன்.
2 mins
May 22, 2025
Vidivelli Weekly
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின வைபவம்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு 7 ஜே.ஆர். ஜெயவர்தன நிலையத்தில் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
1 min
May 22, 2025
Vidivelli Weekly
உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்ற தொடரும் அரசியல் போராட்டம்!
இலங்கையிலுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கடந்த மே 6 ஆம் திகதி முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை யார் பெறப்போகின்றனர் என்ற தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது
4 mins
May 22, 2025
Vidivelli Weekly
பலஸ்தீனத்தை ஆதரிக்கவும், காஸா மனிதாபிமான பேரழிவை கண்டிக்கவும் ஒன்றிணைந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும்
காஸாவில் நிகழும் மனிதாபிமான பேரழிவினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், போர்நிறுத்தம் மற்றும் முற்றுகையை நீக்கவும் அழைப்பு விடுப்பதற்காக இலங்கையின் அனைத்து அரசியல் தலைவர்களும் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடினர்.
3 mins
May 22, 2025
Vidivelli Weekly
மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் ஐந்தாம் வருட நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை பேராதனை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை, அறபு மொழித் துறையின் முன்னாள் தலைவரும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முன்னாள் பணிப்பாளரும், கல்விமானுமான மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் ஐந்தாவது வருட நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 6.30 மணிக்கு கொழும்பு, மருதானை தெமடகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
1 min
May 22, 2025
Vidivelli Weekly
'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' செவ்வாயன்று நூல் வெளியீட்டு விழா
இலங்கையில் நடைபெற்ற திகிலூட்டும் உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.கே.எம். அஸ்வர் எழுதிய 'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாயன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
1 min
May 22, 2025
Translate
Change font size