Poging GOUD - Vrij
பிற உயிர்கள் காப்போம்!
Dinamani Tirunelveli
|March 07, 2025
எந்த மருத்துவரும், தானிய உணவுகள், காய்கறி, பழங்கள், கீரை வகைகளை விட புலால் உணவு மனிதனுக்குச் சிறந்தது என்று மனமுவந்து பரிந்துரைப்பதில்லை. முடிந்தவரை புலால் உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார்கள்.
இறைநிலை அல்லது இயற்கையின் படைப்பில், எல்லா உயிர்களும் சமம். இதைத்தான் வள்ளுவப் பெருமகனார், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்று கூறுகிறார். அதாவது, எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரு தன்மையானதே. ஆயினும், செய்கின்ற தொழில்களில் உயர்வு, தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை என்பது அக்குறளின் பொருள். ஆக பிறப்பால் எல்லா உயிர்களும் சமம் என்பது உறுதி.
உணவு உண்ணக்கூடிய அடிப்படையில் உலகில் உள்ள உயிர்கள் மூன்று வகைப்படும். முதலாவது, தாவர உணவுகள் அல்லது சைவ உணவுகளை மட்டுமே உண்ணக்கூடிய ‘ஹெர்பிவோர்’ எனப்படும் தாவர பட்சிணிகள், இரண்டாவது, மற்ற உயிரினங்களை உணவாக உண்ணக்கூடிய அல்லது அசைவ உணவுகளை உண்ணக்கூடிய ‘கார்னிவோர்ஸ்’ என்று சொல்லக்கூடிய மாமிச பட்சிணிகள். மூன்றாவது, தாவர உணவுகள் மற்றும் மாமிச உணவுகள் இரண்டையும் உண்ணக்கூடிய ‘ஆம்னிவோர்ஸ்’ என்று சொல்லக்கூடிய சர்வ உண்ணிகள்.
கற்கால மனிதன் ஆரம்ப காலத்தில் காடுகளிலும், குகைகளிலும், அடர்ந்த வனங்களிலும் வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பசி வரும்போது, தன் பசியைப் போக்கிக் கொள்ள, தன்னை விட வலிமை குறைந்த விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் மாமிசத்தை பச்சையாக உண்டு வந்தான். அடுத்து, கற்களை உரசி நெருப்பை உண்டாக்கத்தெரிந்தபின் வேட்டையாடிய மாமிசங்களை தீயில் பொசுக்கி, வேக வைத்து உண்டு மகிழ்ந்தான். சுட்ட மாமிசம் ருசியாக இருந்ததால், ருசியான உணவுக்கு மனிதன் அடிமையாக ஆரம்பித்தான். ஆனால், இதே காலகட்டத்தில் மரங்களிலிருந்தும், செடிகளிலிருந்தும் விளையக்கூடிய பல வகையான கனிகளையும், காய்கறிகளையும் அவை என்னவென்றே தெரியாமல் உண்டு வந்தான்.
காலப்போக்கில் விலங்குகளின் எண்ணிக்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், அதனால் ஏற்பட்ட பசியின் கொடுமையாலும், மனிதன் மாற்று உணவைத் தேடத் தொடங்கினான். அப்போது தன் ஆறாம் அறிவால் சிந்திக்கத் தொடங்கி, தானியங்களைப் பயிர் செய்யும் விவசாயத்தைக் கற்றுக்கொண்டான். இப்போது ஆறாவது அறிவின் பயன்பாட்டாலும், அதை உபயோகிக்கத்தெரிந்து கொண்ட ஆற்றலாலும் மாமிச உணவுடன் தாவர உணவையும் சேர்த்து, இரண்டையும் புசித்து வந்தான்.
Dit verhaal komt uit de March 07, 2025-editie van Dinamani Tirunelveli.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
'ஜனநாயகன்' இணையத்தில் கசிந்த வழக்கு: முக்கிய நபர் கைது
நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
மாநிலங்களவைத் தேர்தல்: கார்கே உட்பட பலர் போட்டியின்றித் தேர்வு
மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கர்நாடகம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பல வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி தேர்வானார்.
1 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.10.98 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
தமிழ்நாட்டிற்கான நடப்பு 2026-27 நிதியாண்டின் ரூ.10.98 லட்சம் கோடி மதிப்பிலான வருடாந்திர கடன் திட்டத்தை மாநில நிதியமைச்சர் என். மரிய வில்சன் வெளியிட்டார்.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
கேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதி
கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 12, 2026
Translate
Change font size

