Poging GOUD - Vrij

நீட் தேர்வுக்குத் தடை தேவையா?

Dinamani Pudukkottai

|

May 31, 2025

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, பட்டியலின-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் பொது ஒதுக்கீட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. அப்படியிருக்க நீட் தேர்வை எதிர்ப்பதற்கு போதுமான காரணம் இல்லை.

- டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா

நுழைவுத்தேர்வு என்பது ஏதோ நேற்றோ, வந்தது அல்ல; அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் வரலாறு இருக்கிறது. இது அரசால் காலங்காலமாக நடத்தப்படும் ஒன்றுதான்.

சரியாக 54 ஆண்டுகளுக்கு முன் சென்னை சட்டக் கல்லூரியின் வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவர் சேர்க்கைக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. 1961-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அகமதாபாத் இந்திய நிர்வாக மேலாண்மை நிறுவனம், நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் கெட்டிக்கார மாணவர்களின் கனவாகவும், அமெரிக்காவுக்கு செல்லும் கடவுச் சீட்டாகவும் இருக்கிறது.

இதற்கு முன் 1858-ஆம் ஆண்டுமுதல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐ.சி.எஸ். என்ற கடுமையான போட்டித் தேர்வும், சுதந்திர இந்தியாவில் ஆட்சித் துறை, காவல் துறை, வெளியுறவுத் துறை என பல வகை வேலைக்கான நுழைவுத் தேர்வுகளும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) 75 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. அதுபோல், மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வுப் பணி ஆணையம் ஆண்டாண்டு காலமாக தேர்வுகளை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு மூலம் பல மாநிலங்களில், பல பாடத்திட்டங்களின் அடிப்படையில் தேர்வு பெற்ற மாணவர்களை, ஒரே நேர்கோட்டில் பரிசோதித்து திறமையானவர்களை மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்புதான். இதில் 15% வெளிமாநிலத்தவர்களுக்கு ஒதுக்கீடு உள்ளது.

ஏதோ நுழைவுத் தேர்வை இந்த ஆட்சி கொண்டு வந்தது; அந்த ஆட்சி தடுக்கவில்லை; ஒரே நாளில் அதை நீக்கி விடுவோம்; ஒரு கோடி கையொப்பம் வாங்கினால் நீட் மறைந்துவிடும் என்று பேசுவதெல்லாம் அற்பமான அரசியல். உண்மையில், நுழைவுத் தேர்வுகள் வெளிப்படையாக அரசியலாக்கப்படுகின்றன.

கல்வி, வெகுஜனமயம் ஆக்கப்பட்ட பிறகு, வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்துள்ள ஒரு நாட்டில் தகுதி தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக நடத்தப்படுவதல்ல; அவை வேண்டாதவர்களை அல்லது தகுதி இல்லாதவர்களை வெளியேற்றுவதற்கு நடத்தப்படுபவை.

MEER VERHALEN VAN Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.

time to read

2 mins

October 14, 2025

Dinamani Pudukkottai

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர்கள் தேர்வு

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலர்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

முதலிடத்தில் புணே

புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Pudukkottai

மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Pudukkottai

கோகோ கெளஃப் சாம்பியன்

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’

குல்தீப், ஜடேஜா அபாரம்

time to read

1 min

October 13, 2025

Translate

Share

-
+

Change font size