Facebook Pixel மலையாள நடிகர், இயக்குநர் ஸ்ரீநிவாசன் மறைவு | Dinamani Puducherry - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

மலையாள நடிகர், இயக்குநர் ஸ்ரீநிவாசன் மறைவு

Dinamani Puducherry

|

December 21, 2025

மலையாள திரையுலகின் மூத்த நடிகர், புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஸ்ரீநிவாசன் (69) உடல்நலக் குறைவால் கொச்சியில் சனிக்கிழமை காலமானார்.

இவரது மறைவுக்கு கேரள ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஸ்ரீநிவாசன், அதன் பிறகு தொடர்ந்து சில உடல்நலப் பாதிப்புகளைச் சந்தித்து வந்தார். இந்நிலையில், எர்ணாகுளம் அருகேயுள்ள உதயம்பேரூரிலிருந்து சனிக்கிழமை காலை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு 'டயாலிசிஸ்' சிகிச்சைக்காகச் சென்று கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக வழியிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி காலை 8.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவருக்கு மனைவி விமலா மற்றும் பிரபல நடிகர்கள் வினீத் ஸ்ரீநிவாசன், தியான் ஸ்ரீநிவாசன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும்.

முதல்வர், பிரபலங்கள் அஞ்சலி:

MEER VERHALEN VAN Dinamani Puducherry

Dinamani Puducherry

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு

தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

பிவிஆர் ஐநாக்ஸ் லாபம் ரூ.186.4 கோடி

நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னிம்

நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

வாராக்கடன் வசூல் நடவடிக்கைக்கு 4,000 பணியாளர்கள்: எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது கடன் வசூல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்த ஓராண்டுக்குள் புதிதாக 4,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Listen

Translate

Share

-
+

Change font size