Poging GOUD - Vrij

நாயைக் கொல்லாத புலி!

Dinamani Karur

|

July 01, 2025

விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. பகை, வன்மம், பழிவாங்குதல் போன்ற தீய குணங்களை மனிதன் விட்டொழித்து அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களைப் பெற்றால் உலகம் உன்னத நிலையை அடையும்.

- முனைவர் இரா.கற்பகம்

சில நாள்களுக்கு முன்பு கேரளம் - தமிழ்நாடு எல்லையில், இடுக்கியில் உள்ள ஒரு ஏலக்காய் தோட்டத்தில், ஓர் ஆழமான குழியில் ஒரு புலியும் நாயும் விழுந்து கிடந்தன. பல மணிநேரம் கழித்துதான் வனத் துறையினர் வந்து அவற்றை மீட்டனர். நாயை வெளியில் விட்டபிறகு, புலியைப் பெரியார் புலிகள் காப்பகத்தில் கொண்டுவிட்டனர். இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் வந்து பலரது கவனத்தை ஈர்த்தது.

அவ்விரண்டு விலங்குகளும் வெகுநேரம் ஒரே குழியில் ஒன்றாகக் கிடந்திருக்கின்றன. இருந்தும், நாயை அந்தப் புலி கொன்று சாப்பிடவில்லை! பொதுவாக சிறுத்தை தான் நாயை வேட்டையாடி உண்ணுமே தவிர, நாயை புலி வேட்டையாடாது. ஏனெனில், நாய் புலியின் இயற்கையான இரை ஆகாது. மான், காட்டெருமை போன்ற பெரிய விலங்குகளே புலியின் இயற்கையான இரையாகும். இரண்டு விலங்குகளுமே உயிர் பயத்தில் இருந்த போது, தப்புவது ஒன்றுதான் அவற்றின் தலையாய கவலையாய் இருந்திருக்குமேயன்றி, உணவைப் பற்றிய கவலை அப்போது இருந்திருக்காது.

விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. அதுவும் இயற்கையின் நியதிக்குக் கட்டுப்பட்டே கொல்கின்றன. அந்தப் புலிக்குப் பசி வந்திருக்கலாம்; இருந்தாலும், தன்னுடன் சிக்கிக்கொண்டு, உயிர் பயத்துடன் இருந்த அந்த நாயின் மீது கருணை கொண்டு, அதை ஒன்றும் செய்யாமல் விட்டது. அந்த நாயும் புலியின் கருணையை உணர்ந்து செவ்வனே இருந்தது. ஐந்தாம் அறிவைத் தாண்டி அவை இரண்டும் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றனவோ எனத் தோன்றுகிறது!

மனிதர்களுக்கு ஆறறிவு உள்ளது. ஆனால், வயிற்றுப் பசி, உடற்பசி, கோபம், ஆணவம், பழிவாங்குதல் என்று ஏதேதோ காரணங்களுக்காகக் கொலை, கொள்ளை போன்ற மகாபாதகச் செயல்களைச் செய்கின்றார்களே! தம் ஆறாம் அறிவைக் கொண்டு இத்தகைய துர்க்குணங்களை விட்டொழிப்பதை விட்டுவிட்டு, இயற்கையின் நியதிக்கு மாறான, எண்ணிப் பார்க்கவும் அஞ்சத்தக்க கொடிய செயல்களை சர்வ சாதாரணமாகச் செய்கிறார்களே!

விலங்குகள் திட்டம் வகுத்துக் கொலை செய்வதில்லை. பசிக்கும்போது தன்னை விடச் சிறிய விலங்கை வேட்டையாடித் தின்கின்றன. ஆனால், மனிதர்கள் சாதுர்யமாகப் பலநாள் திட்டம் வகுத்துக் கொல்கின்றனர்.

MEER VERHALEN VAN Dinamani Karur

Dinamani Karur

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Karur

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

திருச்செந்தூர் கோயில் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி

பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size