தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா
Dinamani Dharmapuri
|July 16, 2025
பென்னாகரம், ஏரியூர், பாப்பாரப்பட்டி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
-
தருமபுரி/ஒசூர்/பென்னாகரம், ஜூலை 15:
பென்னாகரத்தை அடுத்த செங்கனூர் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னப்பள்ளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மா.பழனி தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், நாட்டின் வளர்ச்சி, வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் வளர்மதி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, அனுப்பிரியா, சத்துணவு, அங்கன்வாடி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இராமகொண்டஅள்ளி அரசுப் பள்ளி: ஏரியூர் அருகே இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளியில் மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழாண்டில் தேசியத் திறனாய்வுத் தேர்வு, முதல்வர் திறனாய்வுத் தேர்வு உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், கல்வி வளர்ச்சி நாளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்கு, தலைமையாசிரியர் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழாசிரியர்கள் சுப்பிரமணி, பெருமாள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல பெரும்பாலை அருகே சாணாரப்பட்டி அரசுப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமையில் கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Dit verhaal komt uit de July 16, 2025-editie van Dinamani Dharmapuri.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதி தற்கொலை
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ
அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் வரும் டிச.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Dharmapuri
கட்சி நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஜனவரி 5-க்குள் அரசிதழில் வெளியிட உத்தரவு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Translate
Change font size

