Poging GOUD - Vrij
புற்றுநோயாளிகள் கட்டணமின்றி தங்கிச் செல்ல ஒரு வீடு ..!
Kungumam
|25-07-2025
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடல் ரீதியான சிகிச்சை ஒருபக்கம் இருந்தாலும் மனதளவிலான ஆதரவு நிறைய தேவை.
-
ஏனெனில், நோயின் தாக்கம் குறித்த கவலையும் அதற்கான பல்வேறு சிகிச்சைகளால் ஏற்படும் உடல் வேதனைகளும் அவர்களை மன அழுத்தங்களில் தள்ளிவிடும். அதனால்தான் குடும்பத் தினரும் உறவினர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அப்படியாக புற்றுநோயாளிகளுக்காக சென்னையில் ஆத்மார்த்தமான ஓர் ஆதரவு கரத்தை நீட்டி அவர்களை ஆசு வாசப்படுத்தி வருகிறது இன்டாஸ் பவுண்டேஷன் என்கிற தன்னார்வ அமைப்பு.
அதாவது அடையாறு புற்று நோய் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க சென்னை வரும் வெளியூர் மற்றும் வெளிமாநில நோயாளிகளுக்குக் கட்டணமின்றி தங்கிச் செல்வதற்கு ஓர் இடம் அளிக்கிறது இந்த அமைப்பு.
அதுமட்டுமல்ல. உணவும், போக்குவரத்து வசதியும்கூட கட்டணமின்றி கொடுக்கிறார்கள் என்பதுதான் இதில் இன்னும் சிறப்பு.
இதுதவிர, ஹீமோபிலியா நோய் குறித்து மருத்துவமனைகளுடன் இணைந்து விழிப்புணர்வும், நோயாளிகளுக்கு இலவச பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.
“கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ப்ராஜெக்ட்டை ஆரம்பிச்சோம். அப்போதிலிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வந்திட்டு இருக்காங்க. இந்த ப்ராஜெக்ட்டில் இப்பவரை 540 பேர் பயனடைஞ்சு இருக்காங்க...” என ஆத்மார்த்தமாகப் பேசுகிறார் இந்த ப்ரா ஜெக்ட்டின் அசோசியேட்டான பரத் சுபாஷ்.
“இன்டாஸ் பார்மா நிறுவனத்தின் சிஎஸ்ஆர் கான்செப்ட்டின் கீழ் இந்த ப்ராஜெக்ட் முன்னெடுக்கப்படுது. இதை எதற்காக ஆரம்பிச்சாங்கனா சென்னை போன்ற பெருநகரங்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக மற்ற ஊர்களில் இருந்தோ அல்லது மற்ற மாநிலங்களில் இருந்தோ வருகிறவர்கள் வெளியே அறைகள் எடுத்து தங்குறாங்க.
அவங்களுக்கு சிகிச்சைக்கு ஆகும் செலவைவிட தங்கி இருந்து பார்ப்பதற்கு ஆகும் செலவு அதிகமாவதால் பலர் சிகிச்சையைத் தவிர்ப்பது தெரிஞ்சது. இதனால் புற்றுநோயால் இறப்பவர்களின் விகிதம் அதிகமாவது கண்டறியப்பட்டது.
அதனால் இன்டாஸ் பவுண்டேஷன் 2019ல் ஒரு பைலட் ப்ராஜெக்ட்டாக அகமதாபாத்தில் ஒரு ஹோம் ஆரம்பிச்சாங்க. அந்நேரம் கோவிட் வந்தது. அப்ப நிறைய பேர் அந்த ஹோமை பயன்படுத்தினாங்க. அது வெற்றிகரமானதால் இந்தியா முழுவதும் விரிவாக்கினாங்க. அப்படியாக சென்னையிலும் தொடங்கினாங்க.
Dit verhaal komt uit de 25-07-2025-editie van Kungumam.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
