Prøve GULL - Gratis
திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்
Aanmigam Palan
|July 16-31, 2025
திருமயிலை, திருவொற்றியூர், திருவான்மியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய கடற்கரைத் திருத்தலங்களைத் தொடர்ந்து கடல் நடுவே தீவாக அமைந்துள்ள இராமேஸ்வரம் பற்றி இங்கு காண்போம். இங்குள்ள உலகப்பிரசித்திபெற்ற இராமநாதசுவாமி கோயிலில் இறைவன் பர்வதவர்த்தினி எனப்படும் மலை வளர்காதலியுடன் வீற்றிருக்கிறார்.
வங்கக்கடலில் சுமார் 13,000 ஏக்கர் நில அளவில் அமைந்துள்ள அழகிய சிறுதீவான இராமேஸ்வரத்தில் 15 ஏக்கர் பரப்பில் காட்சி அளிக்கும் எழில் மிகு கோயில் இது.
இந்தியாவெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடும் கோயில். ஞானசம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலம்.
மூர்த்தியாக இரண்டு அடி உயரமுள்ள பாணலிங்கமாகக் காட்சி அளிக்கிறார். திரிகோணமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களால் கருவறை கட்டப்பட்டது என்பர். பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை கூரைக் கொட்டகையாக இருந்த சிவாலயம், பிற்காலத்தில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களாலும் தேவக்கோட்டை ஜமீந்தார்களாலும் திருப்பணி செய்யப்பட்டு பெரும் வளர்ச்சி அடைந்துவிட்டது. மூலவர் சந்நதி முன்பு கொடிமரமும், 22 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் உள்ள சுதையாலான பிரம்மாண்டமான நந்தியும் கண்களைக் கவர்கின்றன.
சிவ பக்தனான ராவணனை அழித்ததால், ஸ்ரீராமருக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்க, அவர் அகஸ்திய முனிவரின் ஆலோசனைப்படி, ராமேஸ்வரம் கடற்கரையில் லிங்கம் ஸ்தாபித்து சிவபூஜை செய்ய விரும்பினார்.
இதற்காக உகந்த நேரம் குறித்து, அதற்குள் சிவலிங்கம் கொண்டு வருமாறு ஆஞ்சநேயரைப் பணித்தார். ஆனால் ஆஞ்சநேயர் வரத் தாமதமானதால், சீதை விளையாட்டாக கடல் மணலில் பிடித்து வைத்த லிங்கத்தையே ராமர் வழிபட்டார். சிவனார் ராமநாத சுவாமி (ராமலிங்கேஸ்வரர்) என்று பெயர் பெற்றார்; தலம் இராமேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. இதனால் சந்நிதியில் பெருமாள் தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது.ஆஞ்சநேயர் பூஜைக்கான லிங்கம் எடுத்துக்கொண்டு வருகையில், நாரதர், "நீ பூஜை செய்வதற்கு ஒரு லிங்கம் வேண்டாமா?" என்று கேட்க, அவர் மீண்டும் சென்று ஒரு லிங்கம் கொண்டு வந்தமையால் தான் காலம் தாழ்ந்தது என்று குறிப்பிடுகிறார் உ.வே.சா அவர்கள்.
Denne historien er fra July 16-31, 2025-utgaven av Aanmigam Palan.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size
